குளச்சல் அருகே மேற்குநெய்யூர் சரல் ஸ்ரீபத்திர காளியம்மன் சுடலைமாட சுவாமி கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலை யரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை திறந்து வைத்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

குளச்சல் வர்த்தக துறை முகத்திட்டம் நிறைவேற நான் முழுமையாக ஈடுபட்டுவருகிறேன். வருங்கால இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற மற்றும் தொழில்வளர்ச்சிக்கு குளச்சலில் வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும். துறைமுகம் அமைக்க ரூ.25 ஆயிரம்கோடி ஆகும். 25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக நான் தொடர்ந்து முயற்சிசெய்கிறேன். இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குளச்சல் துறைமுக திட்டத்திற்கு 10 ஆண்டுகளுக்கு ஆய்வுநடந்தது. அதில் சாத்திய கூறுகள் இல்லாமல் இருந்தது. இப்போது சாத்தியகூறுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். குமரிமாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் சாலைதிட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. இங்கு கான்சர்சென்டர் கொண்டுவரவும் முயற்சி செய்கிறேன். இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவிவழங்குவதில் பிரச்சனை உள்ளது. பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஓத்துழைப்பு தரவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply