பிரதமர் மோடி, ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி தமிழக கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி சென்னைவந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இதனை கொச்சைப்படுத்தி பேசியதாககூறி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தும் தமிழகம் முழுவதும் பாஜக.,வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி. டி.கே. ராஜேந்திரனிடம் பாஜக. தேசியசெயலாளர் ஹெச்.ராஜா இன்று புகார்மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது… ஒருமாநிலத்தின் முதல்வரை பிரதமர் சந்தித்துப் பேசுவது இயல்பானது. ஆனால், பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கொச்சைபடுத்தி பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பை களங்கப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டனத்துக் குரியது. எனவே, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.

Leave a Reply