ஜெய்ப்பூரில் நடை பெறவுள்ள இந்திய – பசிபிக் உச்சிமாநாடு மூலமாக, பசிபிக் தீவுகளில் உள்ள நாடுகளுடனான உறவுவலுப்படும்' என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து , அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இந்திய – பசிபிக் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு வருகை தர உள்ள தலைவர்களையும், குழுவினரையும் வரவேற்கிறேன். இந்தமாநாட்டின் மூலம், பசிபிக்தீவுகளில் உள்ள 14 நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுப்படும் என்று.

ஃபிஜி தீவு, பப்புவா நியூகினியா, சாலமன் தீவுகள் உள்ளிட்ட பசிபிக் பெருங் கடலில் அமைந்துள்ள 14 தீவு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், இந்தமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

எண்ணெய், எரிவாயு, சுரங்கம், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும், பசிபிக்தீவு நாடுகளுக்கும் இடையிலான தொழில்வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply