பேறுகால தாய்சேய் இறப்புத்தடுப்பு சர்வதேச மாநாடு தில்லியில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைக்கிறார்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் சிகே. மிஸ்ரா, தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் குழந்தைகளின் நலன்தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக குழந்தை இறப்புவிகிதம் 70 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், பேறுகால தாய் – சேய் இறப்புத்தடுப்பு சர்வதேச மாநாட்டை இந்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் தில்லியில் ஆகஸ்ட் 27, 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன், டாடா டிரஸ்ட்ஸ், யூனி செஃப், யுஎஸ்எய்டு, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் நடைபெறும் இந்தமாநாட்டில் 24 நாடுகளை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பேறு கால தாய் – சேய் இறப்பைத்தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார் சி.கே. மிஸ்ரா.

Leave a Reply