நாகர் கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய விஜய காந்த் கேட்டிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் நிதிநிலைமை சரியில்லை என்று கூறுகிறார்கள். நிதி நிலை சரியில்லாமல் ஆக்கியது யார்? ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் கடந்த பலஆண்டுகளாக ஆக்கப் பூர்வமான எந்தசெயல்களும் செய்யப்பட வில்லை. இலவசமாக ஓட்டுகளை வாங்கக் கூடிய செயல்களில் அரசு செயல் பட்டதால் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட வில்லை. வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு தொழிற் சாலைகள் வந்தாக வேண்டும். இதற்காக எந்த முயற்சியும் தமிழகத்தில் நடக்கவில்லை.

காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம் என்று பெருமையுடன் சொல்லிவருகிறார்கள். இளங்கோவனின் மோசமான பேச்சுக்கும் தமிழகத்தில் சில அரசியல்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது வேதனை தருகிறது இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறினார்.

Tags:

Leave a Reply