மது விலக்கு போராட்டத்தை திசைதிருப்பியதே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் என தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதனை தெரிவித்தார். சட்ட சபை நிகழ்வை அரசு தொலைகாட்சி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புதிட்டத்தை நடைமுறைபடுத்தவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நதி இணைப்பு திட்டத்தை நடைமுறை படுத்த மத்திய அரசுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தமிழிசை கேட்டுக் கொண்டார். மேலும் சட்டமன்ற தேர்தல் எந்தநேரத்தில் வந்தாலும் சந்திக்க பாஜக தயார் நிலையில் உள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக அறிவித்தார்.

Leave a Reply