கும்பகோணத்தில் 2016, பிப்ரவரியில் நடைபெறவுள்ள மகாமக விழாவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறியது: கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடைபெற இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்தவிழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்கவுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்துதர வேண்டும்.

இந்த விழாவை சிறப்பாக நடத்த மத்தியரசு அனைத்து உதவிகளையும் செய்யும். தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தவறாக பேசிவிட்டேன் என கூறியிருந்தால், இந்தளவுக்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. அவர் தனதுபோக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தரம் தாழ்ந்து விட்டது. பாஜக. ஆட்சிக்குவந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார் இல. கணேசன்.

Leave a Reply