ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரையும், முதலமைச்சரையும் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சிப்பது கண்டனத்திற் குரியது என அந்தகடிதத்தில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனித நாகரீகத்திற்கு எதிராகவும், பண்பாடுமிக்க நமது தேசத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் பேசிய இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் நிபந்தனையற்ற மன்னிப்புகேட்க அறிவுறுத்த வேண்டும் என்றும் சோனியாவை தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply