'நரேந்திர மோடியை சந்திக்காமல், காலில் செருப் பணிய மாட்டேன்' என, இரு ஆண்டுகளுக்கு முன்பு சபதம் செய்த, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த நபர், மோடியை சந்தித்து சபதத்தை நிறைவுசெய்தார்.

 

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், பல்வந்த் குமாவத். இரு ஆண்டுகளுக்குமுன், 'நரேந்திர மோடியை சந்திக்காமல், காலில் செருப்பணியப் போவதில்லை' என, சபதம்செய்தார். அதன்படி, இரு ஆண்டுகளாக, செருப்பு அணியாமலே இருந்தார்.

தனியார், 'டிவி' ஒன்றில், பல்வந்த் குமாவத் பற்றியசெய்தி நேற்று வெளியானது. அப்போது, நரேந்திர மோடிக்காக, ஜெய்ப்பூர் நகரசாலைகளில், வெறும்காலுடன் பல்வந்த் பிரசாரம்செய்த காட்சிகள் ஒளிபரப்பாகின. நரேந்திர மோடி, தேர்தலில் வென்று, பிரதமர் ஆனபிறகும், பல்வந்தின் வெறுங்கால் பயணம் தொடர்ந்தது.

தகவல் அறிந்த பிரதமர் தன்னை சந்திக்குமாறு, பல்வந்துக்கு அழைப்புவிடுத்தார். நேற்று முன்தினம், பிரதமர் மோடி ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது, அவரை சந்தித்து, தன் சபதத்தை நிறைவேற்றிய பல்வந்த், மீண்டும் செருப்பணிய தொடங்கி உள்ளார்.

இது குறித்து, பல்வந்த், நிருபர்களிடம் கூறியதாவது:மோடியை சந்தித்துவிட்டதால், என் சபதம் நிறைவேறி விட்டது. நாட்டுநலனுக்காக, ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுமாறு, பிரதமர் அறிவுரை கூறினார்; உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் வகையில், எதிர் காலத்தில் சபதம் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். இவ்வாறு பல்வந்த் கூறினார்.

இதுகுறித்து, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்த , பிரதமர் நரேந்திர , 'நான் பிரதமராகும் வரை, செருப்பு அணிய மாட்டேன் என, பல்வந்த் குமாவத் சபதம் செய்திருந்தார். அவரை சந்தித்தது இனி மையாக இருந்தது. எனினும் அவரதுசெயலை நான் கண்டித்தேன்' எனக் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply