தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை பாகிஸ்தான் ரத்துசெய்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தை ரஷ்யாவின் உபாநகரில் ஏன் எழுப்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது என ரஷ்யாவின் உபா நகரில் இருநாடுகளின் பிரதமர்கள் சந்தித்த போது முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் டில்லியில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேசுவது என முடிவானது. ஆனால், இந்த சந்திப்பிற்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திக்க பாகிஸ்தான் முடிவுசெய்தது. மேலும் பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர்குறித்து கிளப்பவும் முடிவு செய்தது. இதற்கு இந்தியா எதிர்ப்புதெரிவித்தது. அவர்களை சந்திக்கக்கூடாது என இந்தியா கண்டிப்புடன் கூறியது. பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால், பேச்சு வார்த்தை நடக்காது என இந்தியா கூறியது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்நிலையில் பத்திரிகை யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பேச்சு வார்த்தையின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவது என பாகிஸ்தான் முடிவுசெய்திருந்தால், ரஷ்யாவின் உபா நகரில் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஏன் பேசவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் மூன்றாவது நாடு தலையீட்டை ஏற்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்யபட்டது. அவர்கள் பேச்சு வார்த்தை தொடர்பான திட்டத்தை முன்னரே முடிவுசெய்திருக்க வேண்டும். இனி என்ன செய்யவேண்டும் என்பதை பாகிஸ்தான் தான் முடிவு செய்யவேண்டும். பாகிஸ்தானுடன் சுமூகமான உறவை தொடர இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானை பொறுத்த வரையில் அவர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

Leave a Reply