இந்தியாவின் முயற்சியை தொடர்ந்து உலகெங்கிலும் கடைப் பிடிக்கப்பட்ட சர்வதேச யோகா தினத்துக்கு ஆதரவு தெரிவித் தமைக்காக, கத்தார் நாட்டுக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்துடன், யோகாவின் சிறப்புகளை விளக்கும் அஞ்சல்தலைகள், நாணயங்கள் ஆகியவற்றையும் மோடி அனுப்பி வைத்துள்ளார். இவையனைத்தும், கத்தாருக்கான முதலாவது இந்தியத்தூதர் சஞ்சீவ் அரோரா மூலம், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் காலித்பின் முகமது அல் அட்டியாஹிடம், ஞாயிற்றுக் கிழமை ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, மோடியின் கடிதத்தையும், அன்பளிப்பு களையும், கத்தார் பேரரசர் ஷேக் தமீம்பின் ஹமது அல் தானியிடம், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஒப்படைக்கிறார்.

Tags:

Leave a Reply