பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பெருமையை சொல்லும் இந்தி இலக்கியத்தின் மகத்தான படைப்பு 'ராம்சரித் மனாஸ்'. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோஸ்வாமி துளசி தாசர் என்வரால் இயற்றப்பட்ட இந்த காவியத்தின் கவிதைவரிகள், தொழில்முறை பாடகர்களின் குரலால் பதிவு செய்யப்பட்டு, கடந்த சில வருடங்களாக, இந்திபேசும் மக்கள் வாழும் பகுதிகளில் ஆல் இந்தியா ரேடியோவால் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆல் இந்தியா ரேடியோவால் தயாரிக்கபட்ட இந்த காவியத்தின் முழுமையான டிஜிட்டல் பதிப்பை வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட உள்ளார். இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் ராமரின் பெருமையை அறிந்துகொள்ளும் என்று ஆல் இந்தியா ரேடியோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply