அகில இந்திய பா.ஜ.க தலைவர் அமித்ஷா இன்று (செவ்வாய்க் கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம், புதுவை வந்தார்.

டெல்லியில் இருந்து விமானம்மூலம் நேற்று இரவு சென்னைவந்த அமித்ஷா அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை கார் மூலம் திண்டிவனம் வழியாக சிதம்பரம் சென்றார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற அமித் ஷாவை கோவில் தீட்சிதர்கள் கும்பமரியாதை செய்து வரவேற்றனர். பின்னர், கோவிலுக்குள் சென்ற அவர் நடராஜர், கோவிந்தராஜ பெருமாள் சன்னதிகளில் பயபக்தியுடன் சாமிதரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோவிலை முழுமையாக வலம் வந்து அம்பாள், தாயார் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெறும் உற்சவ விபரங்களை தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

அமித் ஷாவுடன் சிதம்பரம் பா.ஜ,க நிர்வாகிகள் உடன் சென்றனர். கோவிலில் இருந்து விடைபெற்று அமித்ஷா புதுவை வந்தார்.

புதுவையில் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். மதிய உணவுக்கு பின்னர் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற புதுவை மாநில பா.ஜ.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கும் அமித்ஷா செல்கிறார். மாலை 4 மணிக்கு புதுவை விமானநிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார்.

Leave a Reply