வன்முறை வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை என்று, படேல் மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் நடைபெற்ற மாநாடு மற்றும் உண்ணா விரதப் போராட்டம் போன்றவை கலவரத்தில் முடிந்தது. குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்துக்கிளம்பியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, படேல் மக்கள் அமைதிகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் கூறுகையில், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் பிறந்த, வாழ்ந்த இந்தபூமியில் தற்போது கலவரமும், வன்முறையும் தேவையில்லை. வன்முறை வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல முடியும்.

எனவே, அனைவரும் வன்முறையை கைவிட்டு, அமைதிவழி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். பேச்சு வார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்போம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply