நடுவர்மன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்க குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தாமதத்துக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்றும் சட்டகமிஷன் சிபாரிசு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய மந்திரி சபை கூட்டத்தில், இந்த சிபாரிசு பற்றி பரிசீலிக்கப்பட்டது.

அதையடுத்து, நடுவர்மன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்க கால வரையறை நிர்ணயித்து, சட்டத்தில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. அதன்படி, வழக்குகளில் 12 மாதங்களுக்குள் நடுவர்மன்றம் தீர்ப்பு அளிக்கவேண்டும் என்றும், இருதரப்பினரின் சம்மதத்துடன் மேலும் 6 மாதங்களுக்கு அவகாசம் எடுத்து கொள்ளலாம் என்றும், அதற்குமேல் நீட்டிப்புபெற நீதிமன்ற ஒப்புதலை பெறவேண்டும் என்றும் மத்திய மந்திரிசபை சிபாரிசு செய்துள்ளது.

ஆனால், கூடுதலாக தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் நடுவர்மன்ற நடுவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு வழக்கில் எவ்வகையிலாவது தொடர்பு இருந்தால், அவர் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் மந்திரிசபை சிபாரிசு செய்துள்ளது.

Leave a Reply