குஜராத்தில் கல்வி மற்றும் வே லைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகோரி படேல் இன மக்கள் சுமார் 10 லட்சம்பேர் ஆமதாபாத்தில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

22 வயது ஹர்திக் படேல் ஒருங் கிணைத்து நடத்திய இந்தபோராட்டம் குஜராத் அரசை மிரளச்செய்யும் வகையில் இருந்தது.

படேல் இனத்தவர்களின் போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. அதில் 10 பேர் பலியானார்கள். இதனால் சூரத், போர்பந்தர் உள்பட மற்ற நகரங்களுக்கும் கலவரம் பரவியது.

இதைத்தொடர்ந்து சுமார் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குஜராத் சென்று கலவரத்தை அடக்கினார்கள். தற்போது அங்கு சகஜநிலை திரும்பி வருகிறது. படேல் இனத்தவர் கலவரத்தால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தால் பிரதமர் நரேந்திரமோடி மிகவும் அதிருப்தியும் வேதனையும் அடைந்துள்ளார். 13 ஆண்டுகள் அங்கு முதல்வராக இருந்த மோடி படேல் இனத்தவர்களின் எழுச்சியை முதல்–மந்திரி ஆனந்தி பென் படேல் உரிய முறையில் கையாளவில்லை என்று கருதுகிறார்.

மேலும் குஜராத்தில் படேல் சமுதாயத் தினரிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறித்து உளவுத்துறையும் உரியமுறையில் முன் கூட்டியே தகவல் தரவில்லை என்று பிரதமர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

அவர் தனது அதிருப்தியை தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவலிடம் நேரில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது கோபம் முன் கூட்டியே தகவல் தராத உளவுத் துறை மீது திரும்பியுள்ளது.

குஜராத் கலவரத்தை தடுக்க தவறி யதற்காக உளவுத்துறையில் உள்ள சில அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிகிறது. குஜராத்தில் மீண்டும் கலவரம்வெடித்து விடக்கூடாது என்பதற்காக ராணுவத்தை குவித்துள்ள மோடி தினமும் ஆமதாபாத்தில் ராணுவவீரர்கள் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தி மக்கள்மனதில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன் படி குஜராத்தில் இன்றும் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது.

Tags:

Leave a Reply