சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைசரிவால் சேமிக்கப்படும் தொகை சமூகபாதுகாப்பு திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை ஒருபேரலுக்கு 40 அமெரிக்க டாலர் வரை சரிந்துள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் எரிபொருள் மானியத்தில் மட்டும் சுமார் ரூ.40,000 கோடி மீதமாகும் என்று நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைசரிவால் இறக்குமதி செலவும் குறையும். எனவே, இதில் மீதமாகும் தொகைசமூக பாதுகாப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு செலவிடப்படும்.
இங்கிருந்து எண்ணெய் அல்லது உணவுபொருட்கள் ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக சிலவற்றை இறக்குமதி செய்கிறோம்.

இதனால் கச்சா எண்ணெய் விலைகுறைவின் பலன் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி உணவுபொருள் விலை குறையவும் இது காரணமாக அமையும். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதுதான் வறுமையை ஒழிப்பதற்கான வழி. ஆனால், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் வறுமை ஒழிப்பை மட்டுமே கவனிப்பது, வறுமையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். எரிபொருள் தேவைக்காக 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 12,400 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply