நிலமசோதா தொடர்பாக, ஒருதரப்பினர் தேவையற்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்; இதன் மூலம், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், பயத்தை ஏற்படுத்தவும் முயற்சிக் கின்றனர்; இதுபோன்ற முயற்சிகளை, மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது; விவசாயிகளின் நலனுக்காக, எதையும் செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது.

'ஜெய் ஜவான், ஜெய் கிஷான்' என்ற கோஷத்தை, விளம்பரத்துக்காக நாங்கள் எழுப்பவில்லை; அந்தகோஷம் தான், எங்கள் தாரக மந்திரம். இதற்காகவே, விவசாயிகள் நலனுக்காக தனி அமைச் சகத்தை ஏற்படுத்தும் உத்தரவை, சுதந்திர தினத்தன்று அறிவித்தேன். நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பான அவசரசட்டம், இன்றுடன் காலாவதியாகிறது; இதை, மேலும் நீட்டிக்க விரும் பவில்லை. அதனால், அவசர சட்டம் காலாவதியாக அனுமதித்து உள்ளோம்.அதாவது, எனது அரசு பதவியேற்பதற்கு முன்பு நிலவிய சூழ்நிலையை மீண்டும் ஏற்படுத்துவது என்பது இதற்கு அர்த்தமாகும்.

இந்தமசோதா குறித்த விஷயத்தில், அரசு, திறந்த மனதுடன் உள்ளது. மசோதாவை எதிர்ப்பவர்களுக்கு ஒருவிஷயத்தை கூற விரும்புகிறேன். மசோதாவில், என்ன திருத்தம் வேண்டுமானாலும் மேற்கொள்ள தயாராக உள்ளோம்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2013ஆம் ஆண்டைய சட்டத்தில், கிராமங்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநிலங்கள் யோசனை தெரிவித்தன. இதையேற்று, மத்திய அரசு நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தபோது, அதுதொடர்பாக தவறான எண்ணங்களும், விவசாயிகள் மத்தியில் பீதியும் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், இனிமேல் சந்தேகமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை யாருக்கும் அளிக்க நான் விரும்பவில்லை. சந்தேகம் கொள்வதற்கு தற்போது எந்தக் காரணமும் இல்லை. பீதியை ஏற்படுத்த யார் முயற்சித்தாலும், நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதாவில் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 13 அம்சங்களை இணைத்தது. சர்ச்சைகள் ஏற்பட்டதால், அது பிரச்னையாகிவிட்டது. நிலம் கையக அவசரச் சட்டத்தை காலாவதியாக அனுமதித்ததையடுத்து, இந்த 13 அம்சங்களுக்காகவும் அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. நிறைவடையாத பணிகளுக்கு தீர்வு காணும் வகையில், அந்த உத்தரவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. விவசாயிகள் இழப்பை சந்திக்கக் கூடாது; குறிப்பாக பொருளாதார ரீதியில் அவர்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக இதை நாங்கள் செய்கிறோம்.

ரக்ஷா பந்தன் தினத்தின்போது தொடங்கப்பட்ட சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 11 கோடி குடும்பத்தினர் இணைந்துள்ளனர்; இவர்களில் பாதி பேர் பெண்கள்' ஜன் தன் திட்டத்தின் கீழ், "ரூ.22,000 கோடி முதலீட்டின் கீழ் 17.74 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன'.

குஜராத்தில் அண்மையில் நேரிட்ட கலவரம், ஒட்டு மொத்த நாட்டையும் வருத்தம் அடைய செய்தது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேலின் சொந்தமண்ணில் எது நடந்ததோ, அது நாட்டுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் முதலில் ஏற்படுத்தியது.

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை தான் சரியான பாதையாகும். வளர்ச்சி பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செல்வது தான், நமது பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.

கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் குஜராத் மக்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டுகிறேன். மிகக்குறுகிய காலத்தில், குஜராத் சகோதரர்களும், சகோதரிகளும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் மிக முக்கியபங்கை ஆற்றினர். நிலைமை மோசமாக அவர்கள் அனுமதிக்கவில்லை. மாநிலத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தினர்.

அகில இந்திய வானொலியில் "மனம் திறந்து…' (மன் கீ பாத்) என்னும் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை

Leave a Reply