சில கீழ்நிலை அரசு பணிகளுக்கு நடத்தப்படும் நேர்காணல் தேர்வுகளை நீக்குவது குறித்து அரசில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பேசிய பிரதமர், கீழ்நிலை பணிகளுக்காக நடத்தப்படும் நேர்காணல் தேர்வுமுறையில் அழைப்பு வந்தவர்கள் உடனடியாக பரிந்துரைப் பதற்காக யாரையாவது தேடிச்செல்கின்றனர், இதனால் ஊழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மனத்தின் குரல் நிகழ்ச்சியில் நேற்று வானொலியில் உரையாற்றிய பிரதமர், சுதந்திரதின விழாவில்தான் பேசி 15 நாட்களுக்குள் சில அரசு துறைகளில் கீழ்நிலை பணிகளுக்காக நடத்தப்படும் நேர் காணல்களை நிறுத்திக் கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இந்த முடிவு குறித்து தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், இனி ஏழைமக்கள் பரிந்துரைப்பவரைத் தேடி அலைய வேண்டிய தில்லை என்பதுடன் ஊழலும் இருக்காது என்றும் கூறினார்.

Leave a Reply