பீகார் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டனி 126 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடேவின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந்தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, மாஞ்சியின் இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா, மத்திய அமைச்சர் உபேந்திர குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த அணியில் இன்னமும் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வரவில்லை. அதேபோல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதையும் பாஜக. அணி அறிவிக்க வில்லை. முதல்வர் நிதிஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்தியாடுடே (India Today Group- Cicero) குழுமம், பீகாரில் தேர்தலுக்கு முந்தைய நிலைமை தொடர்பாக கருத்துகணிப்பை ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட் டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் விவரம்: இந்த கருத்துகணிப்பு 81 தொகுதிகளில் 5,968 பேரிடம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களை பாஜக. அணிவெல்லும். நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைக்கும். பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு தேவை 122 இடங்கள்.

பீகார் தேர்தலில் முதன்மை பிரச்சனை ஊழல்தான் என 22%; அரிசி விலை உயர்வுதான் என 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. லாலு-பாஸ்வான் கூட்டணி வெறும் 25 இடங்களைத் தான் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply