விஜயதசமி நாளை வெற்றி நாளாக அறிவித்து, அந்நாளில் கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்போவதாக, தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:எந்த நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன், கடவுளை நினைத்து, பூஜைசெய்து ஆரம்பிப்பது, தமிழர்களின் வழக்கம். குறிப்பாக இந்துக்கள், சரஸ்வதி பூஜை – விஜயதசமி நாளில் தான், எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிப்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளை, இந்தமுறை, வெகு விமரிசையாக கொண்டாட, தமிழக பாஜக., முடிவெடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தையும் சேர்த்து, அந்தநாளில், இறைவனுக்கு கொழுக்கட்டை படையலிடும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

கொழுக்கட்டை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்படும். தமிழகம் முழுவதிலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply