சவுதி அரேபியாவின் 85வது தேசியதினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா நாட்டை ஆண்டு வந்த மன்னர் அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி அன்று சவுதி அரேபியாவை சுதந்திரநாடாக அறிவித்தார். அன்றிலிருந்து செப்டம்பர் 23-ம் தேதியை சவுதி அரேபியா நாட்டுமக்கள் தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சவுதி அரேபியா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் , சவுதி அரேபியாவின் 85-வது தேசியதினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply