நேற்று (25.09.2015) அன்று புழல் சிறையில் நடந்த கலவரம் பற்றி அனைவருக்கும் வழக்கமானது போல ஒரு சாதரணமான செய்தியாக தொலைகாட்சியிலும் செய்திதாள்களிலும் கண்டிருப்பீர்கள்.

அங்கு சிறையில் கைதிகளின் போராட்டம் கலவரமாக மாறி அங்கிருந்த காவலர் திரு.முத்துமணி(27) அவர்கள் தாக்கபட்டார். இதுதான் மேலோட்டமான செய்தி.

எல்லோரும் வழக்கமான செய்தியாக பார்த்து அவர்களது வேலையை பார்க்க சென்றாகிவிட்டது..

சிறையில் என்ன நடந்த்து, யார் இந்த முத்துமணி என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..

நேற்று வழக்கம் போல ஜெயிலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள போலிஸ் பக்ருத்தீன் மற்றும் பன்னா இஸ்மாயில் தலைமையிலான வெறிபிடித்த மிருகங்கள் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்தள்ளது. இதில்தான் அவரை காப்பாற்ற முயன்ற காவலர் முத்துமணி யை கொடூரமான முறையில் தாக்கியள்ளது அந்த மிருக கும்பல். தற்போது அவரை சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இன்னும் அபாய கட்டத்தில்தான் உள்ளார்..

யார் இந்த முத்துமணி ..?

முத்துமணி எனது கல்லூரி நண்பன் .. நானும் அவனும் மதுரை தியாகராஜஆர் கல்லூரியில் பயின்றோம். கல்லூரியில் படிக்கும் போது NCC யில் தீவிரமாயிருந்தான். Army அல்லது police ஆகவேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் இருந்தான்.. பின்னர் police ஆக தேர்வு செய்யபட்டு புழல் ஜெயிலில் வார்டராக பணியாற்றி வந்தான்.

25.09.2015 :அன்றைய நாள், அந்த காட்டுமிராண்டி கும்பல் ஜெயிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த்து . அந்நேரத்தில் வழக்கமான கண்காணிப்பு பணிக்கு வந்த அவரை திட்டமிட்டபடி கொலைசெய்ய சுற்றி வளைத்து தாக்கியள்ளது.

அப்பொழுது அவரை காப்பாற்ற வந்த எனது நண்பன் முத்துமணியை பிடித்து சிறையில் உள்ள அறையில் பூட்டி கொடூரமாக தாக்கியுள்ளது அந்த 20 க்கும் மேற்பட்ட மிருகங்களை உள்ளடக்கிய கும்பல். கதவை பூட்டியதால் மற்ற காவலர்களால் உள்ளே நுழையமுடியவில்லை . எனவே அவன் ஒருவனை 20 மேற்பட்ட ஆண்மையில்லாத அந்த கும்பல் தனி ஒருவனிடம் தங்களுடைய வீரத்தை காட்டியுள்ளது. பாவம் அவன், தனது உயரதிகாரியை காக்க முற்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான்.

எனக்கு கோபம் என்னவென்றால், அந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சிறைச்சாலைக்கு வெளியே அறிவில்லாத ஒரு கும்பல் அந்த தீவிரவாத பேடிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. மேலும், தேசியலீக் கட்சி-யானது சிறையில் அந்த கைதிகளை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அந்த இஸ்லாமியர்களை காக்க வேண்டும் என்று பிரச்சினையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கொண்டு சென்றுள்ளது.

இந்த மனித உரிமைகள் அமைப்புகள் என்று திரியும் சிலருக்கு கண்பார்வை பறிபோய்விட்டதாக எண்ணுகிறேன்.. மீடியாக்கள் சிறுபான்மையினர் என்பதால் வழக்கம்போல் விலகி ஓடிவிட்டது.

சமூக ஆர்வலர்கள் என்று அலையும் சிலர் அந்த தீவிரவாத முரட்டு கும்பல்களுக்கு ஆதரவாகதான் இருப்பார்கள் என்பதில் ஐய்யமில்லை . நண்பர்களே, தயவுசெய்து இந்த பதிவை share செய்யுங்கள்.. தாக்கபட்டது யாரோ இல்லை.. நமது மதுரை தியாராஜர் கல்லாரியில் 2007 – 2010 வரைக்கும் BBA பயின்ற நமது தோழன். மதங்களை மறந்து மனிதநேயத்துடன் இந்த பதிவை share செய்யுங்கள் நண்பர்களே…

-செல்வகணேசன் சந்திரன்

Leave a Reply