இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்களில் பெண்வீரர்களை பணியமர்த்த திட்டமிடப் பட்டுள்ளதாக விமானப்படை தளபதி ஆருப் ரஹா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் 83வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விமானப்படை தளபதி ஆருப் ரஹா பேசும் போது, "பெண் விமானிகள் போக்குவரத்து விமானம் மற்றும் ஹெலி காப்டர்களில் பணியாற்றுகின்றனர்.

தற்போது போர் விமானங்களிலும் பெண்வீரர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் இளம் பெண்களை ஊக்குவிக்க முடியும்" என்றார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "விமானப்படை தினத்தில் அதன் வீரர்களுக்கு தைரியத்துடனும் உறுதியுடனும் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது பங்கு என்றும் போற்றக் கூடியது.

நமது ஆகாயத்தை பாதுகாப்பதிலும், பேரிடர் காலங் களிலும் விமானப் படைதான் முன் நிற்கும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply