2015-ம் ஆண்டில் தமிழகம் எங்கும் பயங்கர வெடிகுண்டுதாக்குதல் நடத்த திட்டம்தீட்டி இருந்ததாக, போலீஸ்பக்ருதீன் திடுக்கிடும் தகவல்களை, போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளான்

இதுதொடர்பாக போலீஸ் பக்ருதீன் போலீஸ் விசாரணையில் கூறி இருப்பதாவது:-இந்து அமைப்புகளும், பாஜக.வும் தமிழகத்தில் வளரக்கூடாது என்பது தான் எங்கள்நோக்கம்.

திருப்பூரில் ஒருமாநாடு நடத்தி, 20 இந்து அமைப்பு தலைவர்கள் ஒரேமேடையில் ஏறி பேசினார்கள். அந்த ஒற்றுமை மேலும் வளரக்கூடாது என்றும், அதை தடுக்கவேண்டும் என்றும் நாங்கள் திட்டமிட்டோம்.

அதனால் அதற்கு மூலகாரணமாக இருந்த 4 தலைவர்கள் எங்கள் உடனடி கொலைபட்டியலில் புதிதாகசேர்க்கப்பட்டனர்.தப்பி ஓடிய அபுபக்கர்சித்திக்கை பிடிப்பது கடினம். அவர்சொன்ன 5 கொலை திட்டங்களை முடித்துவிட்டோம். அவர் போலி பாஸ்போர்ட்டு மூலம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார். 1995ம் ஆண்டு புத்தககுண்டு வெடிப்பை நடத்தி முடித்தவுடன் அவர் கத்தார்நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதுபோல இப்போதும் தப்பிச்சென்று விடுவார்.

அடுத்து 2015-ம் ஆண்டில் மீண்டும் அவர் தமிழகம்வருவார். அதன்பிறகு, தமிழகத்தில் பெரியளவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக் கும். அது அவரது அடுத்தகட்ட இலக்கு.
இவ்வாறு போலீஸ் பக்ருதீன் கூறியதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply