அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற இதழான டைம் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக் கணிப்பொன்றை நடத்திவருகிறது.

இணைய வழியாக வாசகர்கள் வாக்களித்து வரும் இந்த கருத்துக் கணிப்பில் 21% வாக்குகளுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்துவருகிறார். மோடிக்கு அடுத்த இடத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டா மிடத்தில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 7 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் ரஷ்யஅதிபர் புதின் மற்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்ப் 6 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

2014-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக டைம் பத்திரிக்கை நரேந்திர மோடியைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply