தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் மகாராஷ்டிரம், ஹரியாணாவை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்க முடியும் என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக தமிழகப் பொறுப்பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்ற பாஜக மாநில பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியது:

மகாராஷ்டிரத்தில் பாஜக இது வரை 119 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட்டதே இல்லை. ஆனால், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 123 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்துள்ளோம்.

அதே போன்று ஹரியாணாவில் கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகளுடன் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், இப்போது 36 சதவீத வாக்குகளுடன் 46 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம்.

அடுத்து நடைபெறவுள்ள காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் நாம் வெற்றிபெறப் போவது உறுதி.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைப்போம் என்று கூறிய போது அதனை யாரும் நம்பவில்லை. கூட்டணி ஆட்சி அமையும், மூன்றாவது அணி தான் ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் பேசினார்கள்.

ஆனால், மக்களின் மகத்தான ஆதரவுடன் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதுபோல வரும் 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், பிகார் மாநிலங்களில் பாஜக ஆட்சிஅமைக்கும்.

தலைவர்கள் எப்படி வேண்டு மானாலும் பேசலாம். ஆனால், தொண்டர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வேலைசெய்ய வேண்டும். தொண்டர்கள் நம்பிக்கையுடன், கடுமையாக உழைத்தால் 2016-இல் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது.

தமிழகப் பொறுப்பாளராக இருந்த போது கடந்த 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 25-க்கும் அதிகமான கூட்டங்களுக்கு என்னை அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ். மோகன் ராஜூலு அழைத்துச் சென்றார். பல கூட்டங்களுக்கு 10 பேர் 20 பேர் தான் வந்தார்கள். அவர்களுக்காக நான் 45 நிமிடங்கள் பேசியதை இப்போதும் என்னால் மறக்க முடியாது .

இனி இந்நிலை மாறவேண்டும். 10 பேர் வந்த இடங்களிலும் 10 ஆயிரம் பேரைத் திரட்டவேண்டும், 1000 பேர் வந்த இடங்களில் 1 லட்சம்பேரை திரட்டவேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிள்ள அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்வலிமை பாஜக.,வுக்கு மட்டுமே உள்ளது. இந்தபொன்னான வாய்ப்பை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராஜீவ்பிரதாப் ரூடி.

Leave a Reply