2019 தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி 252 இடங்களில் வெற்றிபெறும் என டைம்ஸ்நவ் டி.வி – வி.எம்.ஆர்.இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் 2019- லோக்சபா தேர்தலை நாடுசந்திக்க உள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆளப்போவது கூட்டணி ஆட்சியா? அல்லது பெரும்பான்மை ஆட்சியா ? என்ற கருத்துகணிப்பினை மாநிலம் வாரியாக டைம்ஸ்நவ் டிவி- வி.எம்.ஆர்.இணைந்து நடத்தி இன்று வெளியிட்டது. அதன் விவரம்:

நடக்க உள்ள பொதுத்தேர்தல் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 252 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 147 இடங்களில் வெற்றிவாய்ப்பு உள்ளது. பிற கட்சிகள் 144 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
உபி. 80 தொகுதிகளில் மயாவதி- அகிலேஷ் கூட்டணி கட்சிகள் 51 இடங்களிலும், பா.ஜ., 27 இடங்களிலும் , காங்., கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும்
.
தமிழகத்தி்ல்
தி.மு.க., கூட்டணி 35 இடங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி 4
மஹாராஷ்டிரா: 48 தொகுதிகள்.
பா.ஜ.கூட்டணி, 43, காங், கூட்டணி -5
மேற்கவங்கம்: 42 தொகுதிகள்;
திரிணாமுல் காங்.-32, பா.ஜ, -9, காங், அல்லது இடது சாரி -1
பீஹார்: 40 தொகுதிகள்
பா.ஜ., கூட்டணி -25, காங்.,-15
மத்தியபிரதேசம்: 29 தொகுதிகள்.
பா.ஜ. கூட்டணி -23, காங்., கூட்டணி- 6
கர்நாடகா: 28 தொகுதிகள்;
பா.ஜ. கூட்டணி, 14- காங்., கூட்டணி-14
குஜராத்: 26 தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி -24, காங்.,2

ராஜஸ்தான்: 25 தொகுதிகள்;
பா.ஜ. கூட்டணி- 17, காங். கூட்டணி- 8

ஆந்திர பிரதேசம்: 25 தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி,-0, ஒய்.எஸ்.ஆர். காங். -23, தெலுங்கு தேசம்-2
ஒடிசா: 21தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி-13, பிஜூ ஜனதாதளம்.,-8, காங்., கூட்டணி-0
கேரளா: 20 தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி- 0, காங். கூட்டணி-16 , இடதுசாரி-3

தெலுங்கானா: 17 தொகுதிகள்:
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி-10, காங்,கூட்டணி – 5, பா.ஜ, கூட்டணி-1, பிற கட்சி-1
அசாம்: 14 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி-8, காங்.கூட்டணி-3, பிற கட்சிகள்-3
ஜார்க்கண்ட்: 14 தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி -6, காங். கூட்டணி -8

பஞ்சாப்: 13 தொகுதிகள்
பா.ஜ. கூட்டணி,- 0, காங்.கூட்டணி -12, ஆம் ஆத்மி-1

சத்தீஷ்கர்: 11 தொகுதிகள்:
பா.ஜ. -5, காங்,. கூட்டணி -6

வடகிழக்கு மாநிலங்கள்: 11 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி -9, காங். கூட்டணி-1, மற்றவை-1
அரியானா: 10 தொகுதிகள்:
பா.ஜ.கூட்டணி-8, காங். கூட்டணி-2
டில்லி: 7 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி,- 6, ஆம் ஆத்மி -1
ஜம்மு-காஷ்மீர்: 6 தொகுதிகள்:
காங். கூட்டணி-1, பா.ஜ. கூட்டணி -1,தே.மா க. -4

உத்தர்காண்ட்: 5 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி -5

இமாச்சல் பிரதேசம்: 4 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி -3, காங்., கூட்டணி -1
கோவா: 2 தொகுதிகள்:
பா.ஜ. கூட்டணி-1, காங். கூட்டணி-1
புதுச்சேரி: ஒரு தொகுதி
காங். -1
அந்தமான் நிக்கோபார் : ஒரு தொகுதி
பா.ஜ. -1
டாமன், டையூ: ஒரு தொகுதி
பா.ஜ.-1

Leave a Reply