பீகார் சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. தனது பெரும்பான்மையை நிதிஷ் குமார் நிரூபித்துள்ளதால் ஆட்சிதப்பியது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைகொண்ட மகாகூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. முதல்வராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணைமுதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்துவந்தனர்.

 

இந்த ஆட்சி சுமார் இரண்டரை ஆண்டுகளை கடந்தநிலையில் மகாகூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஹோட்டல்களுக்கு டெண்டர் விடப் பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கி யுள்ளது.
 

இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தி யடைந்த நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை புதன்கிழமை மாலை திடீரென ராஜினாமாசெய்தார்.

பீகார் அரசியலில் அதிரடிதிருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் நள்ளிரவில் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தார்.
 
அதன்படி வியாழக் கிழமையன்று காலை பீகார் முதல்வராக 6வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர். புதிதாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்குகோரினார்.
 
243 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள்; காங்கிரஸுக்கு 27 என மொத்தம் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நிதிஷ் குமாருக்கு ஜனதா தளக்கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 58 என 129 எம்.எல்.ஏக்க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 122 எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்சுக்கு அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்- 71 , பாஜ., கூட்டணி 58 – சுயேச்சை- 2 மொத்தம் – 131 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.