அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்கு ள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, பொருளா தாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன்மூலம், அத்தியா வசிய பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திரமோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாதமும், நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிறார். நேற்று, ஒலிபரப்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:
 

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி விதிப்புமுறை, மிகவும் குறுகிய காலத்தில் அமலுக்கு வந்தது. ஒரு மாதத்துக்குள், அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மாநிலங் களுடனும் ஆலோசித்து, அனைவருடன் இணைந்துகொண்டு வரப்பட்ட இந்த வரிவிதிப்பு முறை, கூட்டாட்சி தத்துவத்துக்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.

இதை அமல்படுத்தியதில், செயல்படுத்தியதில், மாநிலங்களுக்கும் மிகப்பெரிய பங்கு,பொறுப்பு உள்ளது. மக்களிடையே, நேர்மை என்ற புதியகலாசாரத்தையும், ஜி.எஸ்.டி., ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகள், வர்த்தகர்கள் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.


பொருள்களை ஒருஇடத்தில்இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான காலம் குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. வாகனங்கள் விரைவாகசெல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள்ளது. '
 

கடந்த, 1942ல், மஹாத்மாகாந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலமே, 1947ல் நமக்கு சுதந்திரம்கிடைத்தது. சுதந்திரத்தின், 70வது ஆண்டை, நாம் கொண்டாட உள்ளோம். அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், மதப்பிரச்னை, ஜாதிப் பிரிவினை, ஊழல், பயங்கரவாதம், வறுமை, அசுத்தம் போன்றவற்றை, நாம் வெளியேற்ற வேண்டும்.


கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த நாட்களில், ஏழை, எளிய மக்கள்தயாரிக்கும் பொருட்களை பயன் படுத்துவதன் மூலம், அவர்களது பொருளாதார நிலை உயரும்.

குஜராத், ராஜஸ்தான், அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளில், ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. வெள்ளத்தால், மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்; விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கபட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிர்காப்பீடு போன்றவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விடப்பட்டு உள்ளது.

 

சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய, நம் வீராங்கனைகளை சந்தித்தேன்.கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம், சோகம் அவர்களிடம் இருந்தது.வழக்கமாக எந்த போட்டி என்றாலும், அதில் ஊடகங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

தோல்வி யடைந்தால், அவர்களுக்கு எதிராக அதிகளவு விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், முதல் முறையாக, கோப்பையை வெல்ல முடியாத போதும், நம் வீராங்கனை களுக்கு, 125 கோடி மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

நீங்கள் கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் இதயத்தை வென்றிருக்கிறீர் கள் என்று, அவர்களிடம் கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.