ரேஷன் கடைகளை வைத்து ஆரம்பித்துவிட்டனர் அடுத்த குழப்பத்தை… இப்போ இதில் என்ன பிரச்சனை இந்த நாம் தமிழர், மே 17 கூட்டத்துக்கு?

மொத்தம் தமிழ் நாட்டில் 2கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். அதாவது 3 நபருக்கு ஒரு ரேஷன் கார்ட் வழங்கபட்டுள்ளது போல் தெரிகிறது. இதுவே தவறு. கண்கூடாகத் தெரியவில்லையா? அம்மா, அப்பா மகன் என்று மூன்றே நபர்கள் உள்ள குடும்பமா எல்லாமே?

ஏன் என்றால் கல்யாணம் ஆகி சென்றாலும் மகனுக்கு ஒண்ணு, மகளுக்கு ஒண்ணு, மகள் மகனை நீக்காமல் தனியாக இவங்களுக்கு ஒண்ணு அம்மா அப்பா பெயருடன் என்று குடும்பத்துக்கு 5 ரேஷன் கார்ட் வச்சு ஏமாற்றும் கூட்டம் எங்கே இருக்கு? இதே மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள் தானே!!!

பிக்பாக்கெட் அடிக்கும் திருடனுக்கும் – இந்த போலி ரேஷன் கார்ட் வச்சு அரசை ஏமாற்றும் மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

கேட்டால் "அவன் அவன் கோடி கோடியா அடிக்கிறான் நான் என்ன ரேஷன் அரிசி அடிச்சு வீடா கட்டப் போறேன்" என்று வசனம் பேசுவது..

உண்மை என்னவென்றால் 2 கோடி கார்ட்களில் 50 லட்சம் வரை போலியானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அரசு அறிக்கைபடி பார்த்தாலும் 10முதல் 13லட்சம் ரேஷன் கார்டுகள் போலி என்று தெரிகிறது.

2016ல் அமைச்சர் தெரிவித்த தகவல்படி 5.12 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்தனர். இந்த அளவு போலி என்றால் அரசு என்ன தான் செய்யும்?

இதன் மூலம் அரசுக்கு எத்தகைய நஷ்டம்…….?? இதோ கணக்கு

அரசு அரிசிக்கு கொடுக்கும் மானியம் – 29.64ரூபாய் ; கோதுமைக்கு – 22ரூபாய். (மானியம் என்றால் நீங்கள் கட்டுவதற்கு பதிலாக அரசு பணம் கொடுக்கிறது என்று எடுத்துகொள்ள வேண்டும்)

அதாவது அரிசி இலவசமாக வானத்தில் இருந்து மழையாக பொழிவது இல்லை.. அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

அப்படிப் பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி இலவசம், என்றால் ஒரு குடும்பத்திற்கு அரசு கொடுக்கும் செலவு மாதம் 20*29.64= 592.80ரூபாய். (ஏன் என்றால் அரிசி இங்கே இலவசம்)

அரிசிக்கு மட்டும் ஒரே ஒரு ரேஷன் கார்டுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி – ஏறகுறைய 592ரூபாய்.

ஆக போலியாக இருக்கும் ரேஷன் கார்டுகள் மூலம் நடக்கும் கொள்ளை அல்லது நஷ்டம் எவ்வளவு ? 592*10,00,000 கார்ட்கள் = 59,20,00,000 ரூபாய்.

அதாவது ஒரு மாதம் போலியாக ரேஷன் கார்டு புழக்கத்தால் கொள்ளை போகும் தொகை ஏறகுறைய 60கோடி.. ஆண்டுக்கும் 720 கோடி.. இது வெறும் அரிசிக்கு மட்டும் ஆகும் நஷ்டம்.

இது தவிர அனைத்து பொருட்களையும் கூட்டி கழித்தால் ஆண்டுக்கு சுமார் 1250கோடியை தாண்டி நஷ்டம்.. இது இத்துடன் முடியவில்லை இனி தான் கதை ஆரம்பம்.
 

1947ல் Public distribution system மூலம் ஏழைகளுக்கு உணவு அளிக்க மத்திய அரசு மாநிலங்களுடன் சேர்ந்து உணவு இல்லாத நிலையில் ஒரு உயிர் கூட இறந்து போவது நாட்டின் சாபம். அதை முதலில் ஒழிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியது.. அப்போ 99% ஏழைகள் , படிக்காத மக்கள். வாரத்திற்க்கு ஒருமுறை அரிசி கஞ்சி குடுப்பதே அரிது என்ற நிலையில் 80% மக்களை கொண்டு நாடு விடுதலை அடைகிறது.

உலகமே இந்தியாவால் தனது மக்களுக்கு உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாது என்று குறை சொல்லும் நிலையில் இருந்தது. ஆனால் இப்போது….? நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து அனைத்து ரேசன் கடைகளிலும் ஏழைகளுக்கு உணவை வழங்கிக் காப்பாற்றியது.

பிரச்சனை என்னவென்றால் – இன்றும் வசதியான மக்கள் கூட ரேஷன் பொருட்களை எதற்கு விட்டு கொடுக்கவேண்டும் என்று வாங்குவதால் அரசுக்கு சுமை அதிகம் ஆகிறது.

அதாவது 20% மக்கள் வரை ரேஷன் பொருட்கள் வாங்கி பிழைக்கும் நிலையில் இல்லை என்ற போதும், ஏன் அரசு வசதியானவர்களுக்கு மட்டும் ரேஷன் நிறுத்தக் கூடாது?

அதாவது நாட்டில் தமிழகத்தில் மட்டும் 2500000முதல் 3500000 மக்கள் வரை இந்த ரேஷன் பொருட்களை விட்டு கொடுத்தால் அரசுக்கு எவ்வளவு மிச்சம் என்றால்…… ஏறக்குறைய ஆண்டுக்கு சராசரியாக அரசுக்கு 8500கோடி முதல் 9200கோடி வரை மிச்சபடுத்தலாம் என்பது எனக்கு தெரிந்த கணக்கு. இந்த கணக்கு சிலர் 25000கோடிவரை மிச்சம் ஆகும் என்கிறார்கள்.

நாடு முழுவதும் இப்படி முறைபடுத்துவதால் ஆண்டுக்கு சராசரியாக நம்மால் சில லட்சம் கோடிகளை வீணாகாமல் தடுக்கமுடியும். இந்த லட்சம் கோடியை வைத்து எவ்வளவு சாதிக்கலாம்? சிந்திக்கவும்.

உலக வங்கி ஒன்றும் முட்டாள் இல்லை. அது 2016ல் பெரிய அளவு இந்தியாவை எச்சரிக்கிறது. இந்தியாவில் கடினமாக உழைத்தும் பயன் இல்லாமல் போக முக்கிய காரணம் இந்த முறைபடுத்தாத மானியம் தான். கண்மூடித்தனமான மானியம் நல்லது செய்யப் போவது இல்லை.

இந்த நஷ்டமாகும் தொகையைக் கொண்டு அனைத்து அரசு பள்ளிகளையும் CBSE தரத்திற்கு உயர்த்தலாம். இல்லை அதனை கொண்டு துப்பாக்கி உற்பத்தி சாலையை அமைத்து இப்போ இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நவீனமயமாக்கலாம். பாருங்க கட்ட துப்பாக்கி வச்சு தான் நம்ம போலீஸ் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். ஆனா தீவிரவாதி நவீனவகை துப்பாக்கிகளுடன் திரிகிறார்கள்.

இல்லையா இன்னும் 2000 மருத்துவகல்லூரிகள் கட்டி அதிகமான மருத்துவர்களை அரசு உருவாக்கலாம். இப்படி ஆயிரம் வேலை இருக்கு சார் நாட்டில் செய்ய.

ஆக மானியம் அனைத்தும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை சரிதானே…..?
 

ரேஷன் கடையை முழுவதும் மூட போறாங்களாம்… கிளப்பிவிடுகிறார்  இந்த திருமுருகன்…

அவர் ஏதோ பிதாமகன் போல பின்னாடி வரப்போவதை முன்னாடியே கணித்த ஞானி போல் பேசி திரிவது போல் முட்டாள்தனம் எதுவும் இல்லை. ஏன் என்றால் அரசு மானியங்களை ஒழுங்குபடுத்தும் வேலைக்கு கமிட்டி போட்டு நடத்தி அதன் அறிக்கை வெளியாகி அதை நடைமுறை படுத்தும் முன்னர் அந்த அறிக்கையை படித்துவிட்டு இதை செய்ய போகிறது அரசு என்று கூறினார் திருமுருகன்.

மோடி வந்த போதே அனைத்து துறைகளிலும் மானியங்கள் ஒழுங்குபடுத்தத் தனி தனியே குழுக்களை அமைத்து அறிக்கைகள் பெற்றார். இது ஓவியாவுக்கு வோட்டு போடும் கூட்டத்துக்கு எப்படி தெரியும்…? ஒழுங்கா பொருளாதாரச் செய்திகளை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவன் சொன்ன பொய் என்ன தெரியுமா? அனைத்து ரேஷன் கடையையும் மூடிவிடுவர் என்பது தான்.

அது தவறு..

அரசு ஊழியர்கள், வருமான வரிகட்டும் வசதியானவர்கள், தொழில்சாலை மூலம் வரி கட்டும் பணக்காரர்கள், கார் – AC என்று நல்ல வாழ்வை பெற்றவர்கள் என்று சமூகத்தில் பொருளாதார நிலையில் மேம்பட்டு விட்ட மக்களுக்கு இனி மானியவிலை பொருட்கள் கிடையாது. இதில் இப்போ என்ன தவறு?

பின்னாடு மூடிருவாங்கப்பு என்று அப்படியே பல்லவியை திருப்பி போடுவான் பாருங்க. இவனுகளை திருத்தமுடியாது.

1947ல் ஏழைகளுக்காக தான் இந்த திட்டம் நாம் உருவாக்கினோம். இப்போ அதை முறைபடுத்தி ஏழைகளுக்கு மட்டும் இந்த பயன் போய் சேரவேண்டும் என்று மோடி அரசு முறைபடுத்துகிறது.

இதில் என்ன தவறு….?

அப்போ ஏன் திருமுருகன் குழப்பணும்? அவருக்கும் சீமானுக்கும் வேற வேலையே கிடையாது…. அதனால்தான்….! இந்தியாவுக்கு எதிராக எதாவது செய்தால் தானே காசு கிடைக்கும். மே17 என்று ஆரம்பித்தனர் ஆனால் இன்றய தேதியில் ஈழத்தமிழர்கள் ஆதரவாளார்கள் யாரும் தமிழகத்து இயக்கங்களை நம்பி நன்கொடை தரப்போவது இல்லை.

எனவே சீனா கொடுக்கும் நன்கொடையை வாங்கி கொண்டு இந்திய அரசுக்கு எதிராக பிரிவினையை தூண்டும் வேலையில் சீமான், திருமுருகன் போன்ற போராளிகள்.

உண்மையில் நாட்டு மக்கள் நல்லா இருக்கணும்னு நினைத்தால் இவர்கள் என்ன சொல்ல வேண்டும் "மக்களே, வசதியானவருக்கு ரேஷன் அரிசி கிடையாதாம். விட்டு கொடுங்கள். அரசு எடுக்கும் சரியான நடவடிக்கையை நாம் ஆதரித்தால் தான் நாடு நல்லா இருக்கும்" என்று கூறி இருப்பார்.

ஆனால் இவருக்கு தான் அது முக்கியம் இல்லையே. அதனால் எப்படி ஏழை அப்பத்தா ஓலை ஊறுகாய் வரி என்று வசனம் பேசி மக்களை தூண்டிவிட்டாரோ சீமான் எது போல இதுவும் ஒன்று.

இவர்களை பொருத்தவரை நாட்டில் நல்லதே நடக்கவில்லை.
 

படிக்காத சாமானிய மனிதன் நம்பலாம்…. ஆனால் படித்த மக்களும் நம்புவது நாட்டின் கேடு.

"அரசுக்கு எதிராக பேசிவிட்டால் போராளி என்ற மனநோய் இந்த சமூகத்தை சீரழிக்கிறது. அதை விட்டு 100 பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு தொழில்சாலையை உருவாக்குவது என் லட்சியம். அதற்கு நான் பொருளாதார போராட்டத்தை முன்வத்து உழைக்க போகிறேன் என்று எவன் ஒருவன் நினைத்தால் அவனால் குடும்பமும் நலம் ஆகும், சமூகமும் நல்லது நடக்கும். இது போல் கண்ட கண்ட நக்சல் அமைப்பு வேலை செய்யும் கூட்டத்தை போராளிகளை நம்பினால் வீடும், நாடும், வாழ்வும் நாசம் ஆகும் தவிர நல்லது நடக்க போவது இல்லை".
 

***அரசி இலவசமா எல்லாருக்கும் கொடுக்கணும்;
***அதே நேரம் விவசாயிக்கு அரசிக்கான கொள்முதல் விலையை அதிகமாக கொடுக்கணும்;
***அத்தோட விவசாயி வாங்கின கடனை எல்லாம் தள்ளுபடி செய்யணும் ; ***அப்புறம் பயிர்கடன் எல்லாவிவசாயிக்கும் கொடுக்கணும்;
***கரண்ட் இலவசமா கொடுக்கணும்;
***படிப்பு இலவசமா கொடுக்கணும்;
***அரசு மருத்துவமனைகள் சரி இல்லை வசதியை கூட்டணும்;
***அதுவும் இலவசமா கொடுக்கணும்;
***பெண் குழந்தைக்கு பணம் கொடுக்கணும்;
***படிக்கும் போது ஆதிதிராவிட மாணவர்க்கு இலவசம் கல்வி உதவி தொகை தரணும்;
***முதியோருக்கு உதவி தொகை தரணும்;
***பெட்ரோல் எடுக்குறேன் என்று அரசு வரகூடாது;
***வறட்சி நிவாரணம் தரணும்;
***அரசு ஊழியருக்கு சம்பளம் அதிகமா தரணும்.

இது தான் கம்யூனிஸ்ட் கொள்கை.

நான் கேட்கிறேன். இப்படி நஷ்டமாகும் தொகையை மிச்சபடுத்தினால் தானே நம்மால் விவசாயிகளுக்கு அதிகம் விலை கொடுத்து கொள்முதல் செய்யமுடியும்? அது தானே வழி விவசாயிகளைக் காப்பாற்ற? அதை தானே விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள் உரிய விலைன்னு? அப்படி என்றால் இந்த நடவடிக்கையை எல்லோரும் பாரட்ட தானே வேண்டும்? ஏன் வேண்டும் என்றே குழப்புகிறார்கள்.

அப்போ அரசுக்கு வருமானம்???? வரியும் கூடாது ; இலவசத்தை முறைபடுத்தவும் கூடாது ; தொழிற்சாலை வந்தா அதை கார்ப்ரேட் எதிர்ப்பு என்று அதையும் பத்திவிடுவீர்; சரி அரசு நிறுவனமான ONGC, GAIL போன்றவை வந்தா எதையாவது சொல்லி குழப்பி போராட்டம் நடத்தி அதை இயங்கவிடுவது இல்லை என்னதாண்டா உங்க பிரச்சனை?

இறுதியாக :

இங்கே திமுக கலர் டீவி தருகிறோம், அதிமுக மிக்சி தருகிறோம் என்று வாக்குகொடுத்து தேர்தலை சந்திக்க மோடி "நான் ஆட்சிக்கு வந்தால் வரும் வருவாயை ஒழுங்குபடுத்துவேன், மிம்சாரகட்டணம் ஒழுங்குபடுத்தபட்டு வசூல் செய்யபடும்" என்று கூறி ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் மூன்று முறை முதல்வராக இருந்த அவர் குடும்பத்து உறுப்பினர்கள் யாரும் கோடிகளில் புரளவில்லை. அதனால் தான் குஜராத் மேம்பட்டு நிற்கிறது. போய் சபர்மதி ஆறு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அது ஒன்று போதும் அவர் ஆட்சி திறமைக்கு எடுத்துகாட்டாக.

கூச்சல் போடுவதை விட்டு நேர்மையையாக எது சரி எது தவறு என்று நீயே தேடிப் படி.

நன்றி – மாரிதாஸ் Maridhas M

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.