கதிராமங்கலத்தில் 1958 லிருந்தே கச்சா எண்ணெய் எடுக்கும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30 அன்று கச்சா எண்ணெய் வெளிவரும் குழாயில் சிறு கசிவு ஏற்பட்டதை அடுத்து ONGC பணியாளர்கள் கசிவை அடைக்க விரைந்திருக் கின்றனர். சுமார் 1/2 மணி நேரத்தில் கசிவு அடைக்கப்பட்ட்டிருக்கும். ஆனால், தவறாக வழிகாட்டப்பட்ட சில கிராமத்தினர் ONGC பணியாளர்களை தங்கள் பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதனால் பல மணி நேரம் கச்சா எண்ணெய் கசிந்து வயல் வெளியில் பரவியிருக்கிறது. அதோடு வெளியாட்கள் சிலர் கச்சா எண்ணெய் கசியும் இடத்தில் குப்பைகளைப் போட்டு எரித்து தீப்பற்ற வைக்க முயற்சித்திருக்கின்றனர்.

இதுபோன்றதொரு அநீதி வேறு எங்கேனும் நடக்குமா.. என்பதை பொதுமக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். பின்பு காவல் துறை தீய நோக்கத்தோடு அங்கு கூடியிருந்தோர் மீது நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்திய பின்பு, ONGC பணியாளர்கள் கசிவை அடைத்திருக்கின்றனர். 2000லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறி 4 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியிருக்கிறது. ONGC கச்சா எண்ணெய் கசிந்த நிலத்தை சீர்திருத்தும் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதோடு, நிலத்தின் உரிமையாளருக்கு ரூ 59000 நஷ்ட ஈடும் அளித்திருக்கிறது.

கச்சா எண்ணெய் என்பது நாட்டின் மிகப்பெரும் வளம். கச்சா எண்ணெய் எடுக்கும் பணி காவிரி டெல்டா பகுதியில் மட்டும் நடக்கவில்லை; நாட்டின் பல பகுதிகளிலும் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவ்தோடு எண்ணெய் எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் எடுக்கப்படுவது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கச்சா எண்ணெய் எடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட பகுதி தவிர பிற இடங்களில் விவசாயம் மேற்கொள்ள எவ்வித தடையுமில்லை. கச்சா எண்ணெய் சுமார் 2000 அடி ஆழத்திலிருந்து எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதில்லை.

மத மொழி அடிப்படையில் செயல்படும் சில பிரிவினைவாத சக்திகள் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து, மக்களிடையே தவறான வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்வதோடு மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த மக்களிடையே பல்வேறு போராட்டங்களையும் தூண்டிவிட்டு வருகின்றன.

தங்கள் அரசியல் இலாபத்திற்காக திமுக, பா.ம.க. தேமுதிக போன்ற கட்சியினரும் ONGC க்கு எதிரான் போராட்டங்களைத் தூண்டிவிட்டு வருகின்றனர்.இது தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொள்வதற்கு சமமாகும். மாநிலத்தின் முன்னேற்றம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள்மற்றும் அனைத்து தரப்பினர்களின் முன்னேற்றங்களையும் உள்ளடக்கியதுதான். விவசாயம் , தொலில், மற்றும் அனைத்து துறை முன்னேற்றங்களையும் அடக்கியதுதான்.

மொழியின் பேரால் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள், மாற்று பெயர்களில் செயல்படும் மதவெறியர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழர்கள் வளமாக இருந்தால்தான் தமிழ் மொழி செழித்திருக்கும். இதை நாம் மறந்துவிடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.