”தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.10,160 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது.  90.8% அரிசிக்கான தொகையையும், 91.7% கோதுமைக்கான தொகையையும் மத்திய அரசே வழங்குகிறது.  நாடு முழுவதும் 81 கோடி மக்களுக்கு முறையே கிலோ ரூ. 2 மற்றும் ரூ.3 என வழங்கப்பட்ட மானிய அரிசி விலைகள், 2018 ஆம் ஆண்டு வரை பரிசீலனை செய்யப்படமாட்டாது.“ – இதுதான் ரேசன் அரிசி பற்றி மத்திய அமைச்சர் அறிவித்தது!

 

     2017 ல் பரிசீலிக்கவேண்டும் என்பது காங்கிரசின் திட்டம்! 2013 ல் உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசுதான்! அந்த சட்டத்தில் 3 ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று இருக்கிறது! இந்த ஆண்டே மானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது காங்கிரசின் சட்டம்!

 

     பரவாயில்லை இன்னும் ஓராண்டு போனபின்பு நாங்கள் பரிசீலனை செய்துக்கொள்கிறோம் என்பது பாஜக வின் நிலைப்பாடு! இதை வைத்துக்கொண்டு, ”ரேசன் பொருள் இனி இல்லை”, என்று பத்திரிக்கைகளில் செய்தி போடுகிறார்களே இவர்கள் யார்? இவர்கள்தான் பொருளாதார குற்றவாளிகள்! மோடியின் நேர்மையான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்! ஏழை மக்களை மோடிக்கு எதிராக திருப்பப்பார்க்கிறார்கள்!

 

      இவர்கள் சில கோடி ரூபாயையாவது மாற்ற முடியாமல் இழந்திருப்பார்கள்! அந்த எரிச்சலில்தான் இப்படி வெறுப்பை வாரி கொட்டுகிறார்கள்! எரிவாய்வு மானியமும் பலிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சொல்லியுள்ளார்!

 

    பலிசீலனை என்றால் என்ன? வறியவர்களுக்குதானே மானியம்! சிலர் செல்வந்தர்களாக உயர்ந்திருக்கலாம் இல்லையா! அப்படி உயர்ந்தவர்கள் இருந்தால் அவர்கள் நீக்கப்படலாம்! 12 ம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் கூகுல் கம்பெனியில் சமீபத்தில் மாதம் ரூபாய் 12 லட்சம் சம்பளத்தில் வேலை பெற்றுள்ளான்! பரிசீலனையில் இவன் பெயர் மானியப் பட்டியலிருந்து நீக்கப்படலாம்!

 

     பலிசீலனையை ஒரு வருடம் தள்ளிப்போட்டதற்கு எதற்கு இப்படி பொருளாதார குற்றவாளிகள் துடிக்கிறார்கள்? இவர்களின் மடியில் இருந்தது, கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையால் பறி போனதால், செல்லாகாசாக மாறிப்போனதால் துடிக்கிறார்கள்! குற்றவாளிகளின் துடிப்பு அடங்கட்டும்! நியாயவான்கள் முன்னேறட்டும்! பாஜக ஆட்சி தொடரட்டும்!

குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.