சமூகத்தில் புரையோடிப் போன, சில மத அடிப்படைவாதங்கள், பிளவுகளை ஏற்படுத்தும்; தேசங்களுக்கு இடையே மோதலைவிதைக்கும் பிரச்னைகளுக்கு, பேச்சு மூலமே தீர்வுகாண முடியும்'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மர் தலை நகர், யாங்கூனில் நடக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில், பிரதமர், நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன் சிங்'

மூலம் பேசியதாவது: எப்படிப்பட்ட சிக்கலான பிரச்னைக்கும், பேச்சுமூலம் தீர்வுகாணலாம் என்பது, இந்திய பாரம்பரியத்தின் உறுதியான நம்பிக்கை. இந்த பாரம்பரியத்தில் வந்தவன் நான், என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். நாம், 21ம் நுாற்றாண்டில், பயணித்து கொண்டிருக் கிறோம்.

இன்றைய உலகம், பல்வேறு சவால்களை எதிர்த்துப்போராடி வருகிறது.பயங்கரவாதம் முதல் பருவநிலை மாற்றம் வரை நாம் சந்தித்துவரும் அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சு அல்லது விவாதத்தின் வாயிலாக, தீர்வுகாணலாம் என, நான் நம்புகிறேன்.இந்தியர்கள் பேச்சு மற்றும் விவாதத்தின் வாயிலாக பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வுகண்டுள்ளனர். பேச்சை முன்நிறுத்துவதே தர்க்க சாஸ்திரம். பேச்சு, விவாதம் மூலம் சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

ராமர், கிருஷ்ணர், புத்தர், பிரஹலாதன் ஆகியோரின் செயல் பாடுகள், தர்மத்தை நிலைநிறுத்துவதாகவே. அமைந்திருந்தன.இதை, இந்தியர்கள் நெடுங்காலமாக கடைபிடித்து வந்துள்ளனர்.பிரிவினை வாதம் மூலம் உலகத்தை பிளவு படுத்தும் சர்ச்சைகளுக்கு வித்திடும் சக்திகளை வேரறுத்து, வெற்றிகொள்ள பேச்சு ஒன்றேவழி.

இயற்கையை தெய்வமாக கருதி வழிபடுவதும், இந்திய கலாசாரத்தின் சிறப்பு. சுரண்டக் கூடிய வளமாக கருத கூடாது என்பதற்காகவே, நம் முன்னோர்கள், இயற்கையை தெய்வமாக பார்த்துள்ளனர். இயற்கையை மனிதன் பாதுகாக்கவில்லை என்றால், பருவ நிலை மாற்றம் என்ற வடிவில், இயற்கை நமக்கு பதிலடிகொடுக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள், கட்டுப்பாடுகள், இயற்கையை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டவை. ஆனால், மக்கள் மனதளவில், இயற்கையை பாதுகாக்க உறுதி கொண்டுவிட்டால், எந்த சட்டமும் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.