நாடு முழுவதிலுமிருந்து வரும் 2030-ஆம் ஆண்டுக்குள்ளாக 1.84 கோடி கொத் தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்டகேள்விக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

நாட்டில் உள்ள கொத்தடிமைகளை மீட்பதற்காக சிறப்பு செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கொத்தடிமைகளை அடையாளம் காணுதல், மீட்டல், மறு வாழ்வு அளித்தல் என்ற மூன்று அம்ச நடவடிக்கைகளின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.

அதன்படி, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 1.84 கோடி கொத்தடிமைகளை மீட்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 7 ஆண்டுகளுக்குள் (2017-18 முதல் 2023-24) 90 லட்சம் கொத்தடிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆண்டுக்கு குறைந்த பட்சம் 12 லட்சம் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடுசெய்யப்படும்.

இதனிடையே, மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு உடனடி நிதியுதவி கிடைக்கச்செய்ய ஏதுவாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பண்டாரு தத்தாத்ரேயா.

Leave a Reply