மோடி என்ன செய்யப் போகிறார், என்ன திட்டமிடுகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், ஒரே ஒருவரால் மட்டும், மோடி செய்யப் போகிறார் என்பதைச்  சொல்லமுடியும். ஆம், மோடியின் மன சாட்சியாக இருக்கும் அமித்ஷா தான் அந்தநபர். குஜராத் மாநிலம் மான்சா-வில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அமித்ஷா. அவரது தந்தை Anilchandra Shah மான்சாவில் பி.வி.சி பைப்விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தாய் Kusumba ஒரு காந்தியவாதி.  அகமதாபாத்தில் கல்லூரியில் படித்தபோது, ஆர்எஸ்எஸ் சேவகரா அமித்ஷா இருந்தார். அந்த சமயத்தில் தான்  ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு வந்த நரேந்திர மோடியை முதன் முதலாக அமித்ஷா சந்தித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னார்வலராக இருந்த சூழலில் ஏபிவிபி இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்.

முழுநேர அரசியலில் இறங்கியபிறகு  வியாபாரத்தை புறந்தள்ளிவிட்டார். அரசியல் என்று அவர் சிந்தித்ததே தேசிய அரசியலைத் தான். ஆரம்பத்தில் வி.எச்.பி தொண்டராக இருந்த போது தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், அதனைத் தனது டைரியில் குறித்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் அத்வானி போட்டியிட்டபோது அவரது எலக்‌ஷன் ஏஜென்ட் ஆக இருந்தவர் அமித்ஷா. தொகுதியில் கட்சிக் காரர்களிடம் நெருங்கிப்பழகுவார். அகமதாபாத் நகரில் உள்ள பெரும்பாலான மவுலானாக்கள் அமித்ஷாவின் நெருங்கிய குடும்ப நண்பர்கள். பல்வேறு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களைப்பற்றி பொது இடத்தில் அமித்ஷா பேசுவதில்லை.

ஆரம்பத்தில் ஜனசங்கம், பின்னர் பி.ஜே.பி என்று ஏன் தொடங்கப்பட்டது என்பது குறித்து தொண்டர்களிடம் பேசும்போது அமித்ஷா சொல்வது இதுதான். இந்தியாவை இயக்கும்கொள்கைகள் என்பது இந்தியா உடையதாக இருக்க வேண்டும். மேற்கு நாடுகளின் கொள்கைகளாக இருக்கக்கூடாது. பண்டைய காலத்திய இந்தியர்களின் சிந்தனைகள்தான் நல்லது. புதிய இந்தியா என்பது நம்முடைய பாரம் பரியத்தில் இருந்து மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.


1990 காலகட்டத்தில் குஜராத்தில் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரசாரத்தின் இடையே ஒரு உணவகத்தில் உணவுக்காகக் காத்திருந்தபோது, மோடியிடம் அமித்ஷா இப்படிச் சொல்கிறார். "நரேந்திர பாய், இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தயாராக இருங்கள்" என்றார். ஆம். மோடியை பிரதமர் பதவியை நோக்கித் தள்ளிய வர்களின் அமித் ஷா முதன்மையானவர். மோடி அப்போது குஜராத் முதல்வராகக் கூட இல்லை. மோடியைவிட 14 வயது இளையவர் அமித்ஷா. ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரம் இரண்டிலும் இவர்கள் இருவரும்  ஒரேநோக்கில்தான் சிந்திப்பார்கள். அந்த அளவுக்கு மோடியின் கருத்தைப் பிரதிபலிப்பவர் அமித்ஷா.


2002-ம் ஆண்டு குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், Sarkhej தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 1.58 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். மோடி அவரது தொகுதியில்கூட இவ்வளவு வாக்குகள் பெறவில்லை. குஜராத் அரசியலில் மோடி முதல்வர் ஆனபின்னர், அவரது அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக அமித் ஷா இடம் பிடித்தார்.

2013-ம் ஆண்டு உ.பி லோக்சபாத்தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். அவரின் திறமையால், பிஜேபி-க்கு 71 தொகுதிகள் கிடைத்தன. நரேந்திர மோடி பிரதமர் ஆகப் பதவியேற்ற உடன், டெல்லியிலும் அவருக்கு அருகில் அமித ஷா இருக்கும்படி பார்த்துக்கொண்டார் . தன்னுடன் இணக்கமாக இருக்கும் நபர் தேசிய தலைவர் ஆனால், நல்லது என்று தேசிய தலைவர் பதவிக்கு அமித் ஷாவை நியமித்ததில் மோடிக்கு பெரும்பங்கு உண்டு. உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சியில் அமர்ந்ததில் அமித்ஷாவுக்கு முக்கிய பங்குஉண்டு. இப்போது அமித்ஷா, தமது அரசியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சொந்தவாழ்க்கையில் அமித்ஷா, தம்மனைவி சோனால், மகன் ஜெய் ஆகியோரைச் சார்ந்தே இருக்கிறார். அமித் ஷாவுக்கு இன்னொரு கடமையும் இருக்கிறது. அவரின் உடன்பிறந்த  சகோதரிகள் ஆறு பேர், அவர்களின் குழந்தைகளை அமித்ஷா தான் கவனித்துக் கொள்கிறார். எனவே, சீரியஸ் ஆன அரசியல் ஆலோசனைகளுக்கு இடையேயும் தம் சகோதரிகள் யாராவது அழைத்தால். அவர்களுடன் பேசுவார். அந்தளவுக்கு தமது சகோதரிகள் மீது பாசம் வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.