வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டுதொடர்பாக வாழ்த்துசெய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள் என மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் அனுசரிக்கப்படும் இந்நேரத்தில் அதில்பங்கேற்ற பெருமதிப்புக் குரியவர்களுக்கு தலை வணங்குகிறேன். ’சாதிப்போம்’ என்ற சபதத்துடன் நாம் அனைவரும் தோளோடுதோள் இணைந்து நமது சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெருமைப்படும் வகையில் நாட்டை உயர்த்த நாம் பாடுபடவேண்டும் என பிரதமர் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, 1942-இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுபட போராடியதாகவும், தற்போது வறுமை, பயங்கரவாதம், ஊழல், மத வாதம் உள்ளிட்டவற்றின் பிடியிலிருந்து இந்தியாவைவிடுவிக்க போராடி வருவதாகவும் குறிப்பிட்ட மோடி, 2022 ஆம் ஆண்டுக்குள் நமது கனவான ‘புதிய இந்தியாவை, உருவாக்க இன்று உறுதிஏற்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1947ல் இந்தியா பெற்ற சுதந்திரம் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்குகொண்டு வர தூண்டுகோலாக அமைந்தது என்றும் கூறினார்.

மேலும், வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை வலிமைகொள்ளச் செய்தது என்றும், அதனை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தில், மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற கூற்றை மக்கள் பின்பற்றத்தொடங்கினர்.

இந்தியாவின் சுதந்திரம், உலகின் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியது. சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு போற்றுதலுக்கு உரியது.

தற்போதைய சூழலில் ஊழல், வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச் சத்து குறைபாடு ஆகியவை நம் கண்முன் மிகப்பெரும் சவாலாக உள்ளது.இதில் மாற்றத்தை கொண்டு வருவோம். 75வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது, 1942-47க்கு இடைப்பட்ட எழுச்சியை மீண்டும் உருவாக்க சபதம் ஏற்போம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.