யோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரையை குறித்து நான் அலசி ஆராய்ந்த‌ வகையில் கீழ்கண்ட‌வற்றை தெளிவ ு படுத்த விரும்புகிறேன்.

என்கெபலிடீஸ் என்றால் என்ன ? என்கெபலிடீஸ் மிகக் கொடுமையான குழந்தைகள் மற்றும் வயோதிகர்களை பெரிதும் தாக்கும் மூளை காய்ச்சல். மிக மிக வேகமாக இனப்பெருக்கும் செய்யும் வைரஸ்களால் இந்த நோய் ஏற்படுகின்றது. (சில சமயங்கள் நம் மூளையில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே முளையின் திசுக்களை தாக்குவதாலும் இந்த நோய் ஏற்படுகின்றது) இந்த நோய் தீவிரமடைந்து விட்டால் 30 சதவீதம் பேர் உயிர் பிழைக்க இயலாது என்கின்றன‌ புள்ளி விவரங்கள். 2015ல் மட்டும் உலகில் 43 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள வட ஆற்காடு மாட்டத்தில் முதல் முதலில் காணப்பட்ட இந்த நோய் பின் பல மாநிலங்களுக்கு பரவத் தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் மட்டும் 2010 முதல் 2017 வரை இந்த நோயால் 4093 பேர் இறந்துள்ளனர். அதிலும் ஆகஸ்டு, செப்டம்பர் போன்ற மாதங்களில் இந்த நோய் தாக்கம் அதிகரித்து அதிக உயிரிப்பு ஏற்படுகின்றன. கோரக்பூரில் உள்ள‌ பி ஆர் டி மருத்துமனை இந்தியாவின் 60 சதவீத என்கெபலிடீஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இந்தியா மட்டும் இல்லாமல் நேபாள் வங்க தேசம் என்று பல பகுதிகளில் இருந்தும் இந்த நோயின் சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகிறார்கள். ஆகையால் குழந்தைகளின் இறப்பு என்பது முழுவதுமாக‌ ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது என்பதே விசாரிக்கப் பட வேண்டிய ஒன்று. மிகத் தீவிர உயிரழப்பை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதத்தை கருத்தில் கொள்ளும் பட்சத்தில் இது வெறும் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மட்டுமே என்று சொல்லி விட இயலாது.

அடுத்து யார் இந்த கஃபீல் கான் என்று பார்ப்போம். ரஷ்யாவில் மருத்துவம் படித்து பாஜக எதிர்ப்பு நிலையை முழு நேர தொழிலாக கொண்டுள்ள தலைமை மருத்துவராக இருக்கும் கஃபீல் கானுக்கு எப்படி ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாகுறை ஏற்படும் என்று தெரியாமல் போயிற்று? மேலும் சிலிண்டர் வாங்க அரசு கொடுத்த 2 கோடி நிதி எங்கே? கஃபீல் கானின் சொந்த மருத்துவமனைக்கு எப்படி அவ்வளவு சிலிண்டர்கள் வந்தது? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.

ஒரே இரவில் 36 குழந்தைகள் இறந்த போது இரவு பணியை இந்த கஃபீல் தான் பார்த்திருக்கிறார். அடுத்த நாள் குழந்தைகளின் சாவு எண்ணிக்கை அதிகரித்த போதும் இவர்தான் பார்த்திருக்கிறார். அப்படியென்றால் முதல் நாள் குழந்தைகள் படும் அவஸ்தையை பார்த்து அடுத்த நாள் சுகாதிரித்திருக்க‌லாமே ?…. ஏன் செய்யவில்லை ? செய்தால் பாஜகவின் மீது வலுவாக குறை சொல்லி மக்களை குழப்ப முடியாதே என்ற எண்ணத்திலா? எப்படி இவர்தான் குந்தைகளின் உயிர்களை பறந்து பறந்து காப்பாற்றினார் என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டன ? இது விசாரிக்க வேண்டிய ஒன்று.

சரி யோகிஜியின் தவறு என்ன ? இந்த ஆண்டு மே மாதம் மட்டும் உத்தரபிரதேசத்தில் யோகிஜியின் பெரு முயற்சியால், பாதிக்கப்பட்ட 38 மாநிலங்களில் பெரும் பொருட் செலவில் தடுப்பூசிகள் போடப்பட்டன. முன் எப்போதும் இல்லாமல் இதுவரை ஒரு கோடி பேருக்கு இந்த நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட்டுள்ளது யோகிஜி அரசு. ஆனால் 83 இடங்களில் ஒவ்வொரு குழந்தையையும் யோகி ஜியே கத்தியால் குத்திக் கொன்றது போல் அவரை சாடுகிறார்கள் பிண வியாபாரிகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் சென்று அவர் அமர்ந்துக் கொண்டு நிர்வாக‌ காரியங்களை மேற்பார்வை இட இயலுமா ? அவர் மீது எப்படியாது பழி சுமத்த வேண்டும் என்று மல்லுக் கட்டிக் கொண்டு பரப்புரை செய்கின்றனர் தேச விரோத‌ பிண வியாபாரிகள்.

தற்போது கஃபீல் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்லீப்பர் செல் கஃபீல் கானின் பின்புலத்தை அலசி ஆராய்ந்தால் எல்லாம் தெளிவாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.