தமிழாக்கம் ஒரு இஸ்லாமிய சகோதரரின் பதிவு. உண்மையின் வெளிப்பாடு. இதுவே பாரதத்தை நேசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரின் எண்ணமும் என்பதில் சந்தேகமில்லை.அவரின் இந்திப் பதிவின் தமிழாக்கம் இதோ!!!
 

நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள அச்ச உணர்வோட இருக்கிறார்கள் முற்றிலும் 100 க்கு 100 உண்மை.

1. குழந்தை பருவத்திலிருந்தே பள்ளியில் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் சொல்லி முழங்கி வந்தோம். இப்போது பயமாக இருக்கிறது, ஏதாவது மௌலானா எங்கள் மீது பத்வா விதித்துவிடுவாரோ என்று.


2. எத்தனையோ வருடங்களாக பல முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் ராம் லீலாவில் பற்பல வேடங்கள் தரித்து கொண்டாடி வந்தோம். இப்போது பயமாக இருக்கிறது ஏதாவது முல்லா வந்து எங்களை காபிர்கள் என்று அறிவித்துவிடுவார்கள் என்று


3. எப்போதிருந்து என்று கூட நினைவில்லை.. எல்லா நண்பர்களோடும் ஒன்றாக ஒரே தட்டில் உணவு உண்டோம் என்று, பள்ளி காலங்களில் நண்பர்களுக்குள் டிபன் பாக்ஸ்களை பிடுங்கி உணவு உண்டோம் என்று.. பயமாக இருக்கிறது ஏதாவது இஸ்லாம் தலைவர் வந்து இதற்கெல்லாம் தடை போட்டு விடுவாரோ என்று


4. எத்தனையோ முஸ்லிம்கள் வீடுகளில் பல ஆண்டுகளாக பசுக்களை வளர்ப்பதோடு போற்றி வருகிறார்கள் என்று தெரியுமா? இப்போது பயமாக இருக்கிறது இவர்களை இஸ்லாமின் விரோதிகள் என்று குற்றம் சாட்டி இவர்களை முடித்துவிடுவார்களோ என்று.


சானியா மிர்சாவுக்கு மினி ஸ்கர்ட் அணிந்து டென்னிஸ் விளையாட பயமாக இருக்கிறது என்றால் முகம்மது ஷமியின் மனைவிக்கோ தனது துப்பட்டா அணியும் விதத்தை கூட இஸ்லாமின் தனக்குத்தானே அறிவித்துக்கொண்ட நீதிபதிகளின் கண்டனங்களுக்குப் பயமாக இருக்கிறது, இர்பான் பதான் இந்து சகோதரிகள் தனக்கு ராக்கி கட்டினால் இஸ்லாம் முல்லாக்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது அவரின் மனைவிக்கோ, நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டதற்காக நகத்தை நறுக்கச் சொல்லி கட்டாயப்பதுதியதன் காரணமாக இரவு முழுதும் தூக்கத்தை தொலைத்து பயத்துடனே இருக்கிறார்.
ஆமாம். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஹமீது அன்சாரி. முஸ்லிம்கள் அச்சத்துடனேயே இருக்கிறார்கள் என்று.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.