இந்தியாவில் இருந்து வெவ்வேறுவழிகளில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட 24 பழங்காலச் சிலைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மீட்டுள்ளது.
அமெரிக்காவில்இருந்து நடராஜர், பாகுபலி உள்பட 16 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 5 சிலைகளும், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் இருந்து தலா ஒருசிலையும் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் யாவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2017 வரையிலான காலக் கட்டத்தில், இந்த சிலைகளைச் சம்பந்தப்பட்ட வெளிநாடுகள் தாங்களாக முன் வந்து கொடுத்தன என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்விட்ர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்னும் 13 சிலைகள் மீட்கப்பட இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வகம்தெரிவித்துள்ளது. இந்தியாவில் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை, தூதரக வாயிலாக, ராஜீய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு மீட்டுவருகிறது என்று
மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


தமிழகத்தைச் சேர்ந்த சோழர்கால ஸ்ரீதேவி உலோகச் சிலை, மாணிக்கவாசகரின் வெண்கலச் சிலை, விநாயகர், பார்வதி, பாகுபலி உருவம் பொறித்த உலோகத் தகடுகள் மற்றும் மெüரியர் கால சுடுமண் சிற்பம் உள்ளிட்டவை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டவையாகும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.