இஸ்லாம்மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் வழக்கத்தை அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று கூறியுள்ள சுப்ரீம்கோர்ட், அதேசமயம், இது தொடர்பாக மத்திய அரசு உரியசட்டத்தை இயற்றும்வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முத்தலாக் முறையை முஸ்லிம் ஆண்கள் தவறாக பயன் படுத்தி விவாகரத்து செய்வதால், அப்பாவிபெண்கள், குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். எனவே, இந்தமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதில் 5 ரிட்மனுக்களை இஸ்லாமிய பெண் ஒருவர் தாக்கல்செய்தார். இந்த மனுக்கள் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பின்னர், இந்தமனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

முத்தலாக் முறை இஸ்லாம்மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றுதானா, முத்தலாக் வழங்கப் படுவதில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து ஆராயப்ப டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர், நீதிபதிகள் குரியன்ஜோசப், நாரிமன், யூ.யூ. லலித், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தவிசாரணையை நடத்தினர்.

இந்த விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனி நபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்டவாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முத்தலாக் என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் தலாக்சொல்லி விவாகரத்து அளிப்பதாகப் பெண்கள் அமைப்பினர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டன.

முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப் படுவதாக மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. முத்தலாக் வழக்கில் விசாரணை முடிந்து விட்ட நிலையில் அரசியல் சாசன அமர்வு இந்தவழக்கில் இன்று முத்தலாக் முறைக்கு இடைக் காலத் தடையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
 

3 நீதிபதிகள் முத்தலாக் நடை முறைக்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதே நேரம் தலைமை நீதிபதி கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் நடைமுறை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். எனவே 3:2 என்ற நீதிபதிகளின் விகிதம் அடிப்படையில் முத்தலாக்கிற்கு இடைக் கால தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், முத்தலாக் தொடர்பாக உரியவகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை முத்தலாக் நடைமுறைக்கு இடைக்காலத்தடை இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.