காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 சிஆர்பிஎப். ஜவான்கள் உள்பட பாதுகாப்புபடையை சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ்குடியிருப்பு கட்டடத்தை குறித்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படைவீரர்கள் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு கூடுதல்பாதுகாப்பு படையினரை அனுப்பி வைத்தனர்.

இந்ததாக்குதலில் பாதுகாப்பு படையினர் சிலர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேரும், தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்தபோது 2 பேரும் பலியாகினர். இவர்களில் 4 பேர் மத்திய ரிசர்வ் படை போலீசார். 3 பேர் மாநில போலீஸ் படையைச்சேர்ந்த சிறப்பு அதிகாரிகள். ஒருவர் போலீஸ்காரர்.

 

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை பாதுகாப்புபடையினர் மீட்டனர். இதைதொடர்ந்து, அந்தபகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

 

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படைவீரர்களை இழந்துவாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.