எஸ்விஎஸ் சித்த மருத்துவ கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா மூவரும் பிணமாக மிதந்தது இந்தவாய்க்கரிசி போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?


கரூரிலே சோனாலி என்ற கல்லூரி மாணவியை வகுப் பறைக்குள் நுழைந்து கட்டையால் அடித்து கொன்றானே? அதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே அதுவாது ஞாபகம் இருக்கிறதா?
போன வாரம் பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்திலே பிணமாக கிடந்தார்களே அது பற்றீ யாருக்கேனும் தெரியவாவது வந்ததா?


கும்பகோணத்திலே ஒரு மாணவி தற்கொலை, ஆரணியிலே ஒரு மாணவி கழுத்தை அறுத்து கொலை, தர்மபுரியிலே பள்ளி மாணவி கொலை என போனவாரம் மட்டும் பலகொலைகள், தற்கொலைகள்.

வருட வருடம் தேர்வு முடிகள் வெளீயாகும் போது மட்டும் கிட்டத்தட்ட 50-60 மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.உலக அளவிலே 17 சதவீத தற்கொலைகள் இந்தியாவிலேதான் நடக்கிறது அதிலும் தமிழகம்தான் முதலிடம். இந்தியாவிலே 12 சத தற்கொலைகள் தமிழகத்திலே தான் நடக்கிறது.

எல்லா உயிரையும் சமமாகமதித்து சமத்துவமாக முன்னேற்றமாக இருக்கும் ஆட்கள் என்ன செய்வார்கள்?

தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் நடத்துவார்கள். பள்ளிகளிலே கல்லூரிகளிலே புரிந்துணர்வு விளக்க கருத்தரங்குகள், உதவிகள், ஆலோசனைகள் செய்வார்கள். பெண்களின் பாதுகாப்பை காவல் துறை மூலமும் தற்காப்பு மூலமும் உறுதிசெய்வார்கள்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவரை கொன்று தற்கொலை என நாடகமாடிய மானங்கெட்ட ஜென்மங்கள் என்ன  செய்வார்கள்? பிணத்தை வைத்து பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பார்கள்.

அடுத்து யார் சாவா அடுத்து எவன் குடியை கெடுக்கலாம், குடும்பத்தை அழிக்கலாம் என யோசிப்பார்ள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.