ஒரு காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை தன்னுடை ய தமிழ் தேசிய உணர்வால் எரிய வைத்த தடா பெரிய சாமி இன்று பிஜேபியின் மாநில செயற்குழு உறுப்பின ராகி தலித் மக்களின் இல்லங்களில் தாமரையை மலர
வைக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறார்.

தமிழக மக்கள் விடுதலைப் படை அமைப்பில் இருந்து தீவிரபாதையில் நுழைந்து அதற்காக தடா சட்டத்தினால் கைதாகி பிறகு திருமாவளவனுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங் கிய தடா பெரியசாமி இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பிஜேபியை வளர்க்கும் ஒரு தேசியவாதி..

அவர் இன்று முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவு இதோ.. மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வில் தோல்வியடைந்த அனிதாவின் இந்த முடிவு மன வேதனை அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற விபரீதமான முடிவை யாரும் எடுக்க வேண்டாம்.

மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. அம் மாணவியை வைத்து அரசியல் செய்தார்கள் என்று ஏற்கனவே நான் கேள்விப்பட்டேன். அந்த அரசியல் தலைவர்கள் சரியான முறையில் வழிகாட்டியிருக்க வேண்டும்.

ஏற்கனவே அனிதா படித்த ராஜவிக்னேஷ் என்ற பள்ளியில் பயின்ற இரண்டுபேருக்கு ( ராஜதுரை, ஜெயந்தி) நான் சென்னை முகவரி ரமேஷ் உதவியோடு படிக்க ஏற்பாடு செய்து மருத்துவம் பயின்று வருகின்றனர். அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுக அதே ராஜவிக்னேஷ் பள்ளியில் பயின்ற மாணவன் ராஜதுரை(மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கி யவர்) 2015 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி யை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.உடன் 2G ராஜா அவர்களும் இருந்துள்ளார்.

ஆனால் அந்த மாணவனுக்கு எந்த உதவியும் செய்யா மல் முரசொலிக்கு படம் மட்டும் எடுத்துக் கொண்டார் கள்.மனம் உடைந்த ராஜதுரை தன் ஆசிரியர் செங்குட் டுவனின் உதவியோடு என்னை சந்தித்தார். அதன் பின்பு நான் NDSO பிரபாகர் மூலம் ரமேஷ் யை தொடர்பு கொண்டு 5.1/2 ஆண்டுகளுக்கும் உதவி செய்ய ஒப்புக் கொண்டு தற்பொழுது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகிறார்.

அதே போன்று அதே பள்ளியில் படித்த மாணவி ஜெயந்திக்கும் உதவி வருகின்றோம்.இருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின் அரசியல் செய் யும் அநாகரீக போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும். மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தில் நல்ல தலைமை யை நாடுங்கள்.

3 ஆண்டுகள்வரை நீட் தேர்வு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அம் மாணவிக்கு அளித்திருக்க வேண்டும் தவறிவிட்டனர். மற்றும் மாநில அரசு சரியான விழிப்புணர்வு வழங்க தவறி விட்டது.

*தடா.பெரியசாமி*

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.