நீட் தேர்வு விலக்கில் தமிழகத்தை நம்ப வைத்து ஏமாற்றியதாக பாரதிய ஜனதாவை ,குறிப்பாக நிர்மலா சீத்தா ராமனை குறிவைத்து தமிழகத்தில் அமளிதுமளி நடக்கிறது. திமுக கடும் எதிர்ப்பைதெரிவித்து வருகிறது.

இதில் அனிதா என்ற மாணவி உயிரையே விட்டுவிட்டாள். இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?. இந்தியாவில் எந்த மாநிலமும் விலக்கு கேட்காத சூழலில், நீட் தேர்வு மருத்துவ படிப்பு நல்லது என்று டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் கூறும் நிலையில் இதை இன்னும் அலசுவோம்.

தமிழகத்தில் 2 துறைகள் எனக்குத் தெரிந்து திராவிடக் கட்சிகளால் நாசப்படுத்தப்பட்டு விட்டன. பகீரென்றிருக்கிறது..அதுவும் கனடா வந்தவுடன் எனக்கு இன்னும் அதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

1. பொறியியல் துறை. இங்கே படித்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரண குமாஸ்தா வேலையோ அல்லது தட்டச்சு வேலையோ நான் சென்னையில் இருந்த கால கட்டங்களில் வேலை பார்த்திருக்கிறார்கள்..என்னுடைய உதவியாளே இந்த ரகம். அவர் சொன்னது இது. நானும் பார்த்திருக்கிறேன்.

புற்றீசல் போல் முளைத்து நிற்கும் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஏராளம். அதனால் தரம்குறைந்து கொண்டுவருகிறது.

2. சட்டக்கல்லூரிகள். அடியாள் கூட்டமாக மாறிவருகிறது. என்னுடைய நண்பர்.Manohar Nadar.. ஒத்துக் கொள்வார். அவர் அங்கே தான் படித்தார்.

இரண்டு துறைகளிலும் திராவிட அரசியல் புகுந்துவிட்டது. பாழ்படுத்தி விட்டது.

அடுத்து உயிரோடு விளையாடும் மருத்துவம். தரமுள்ள மாணவர்கள் நாளை மருத்துவர்களாகி அவர்களிடம்தான் நானோ நீங்களோ உடலைக் காட்டவேண்டும்.

மாநில பள்ளித் தேர்வில் 1179 வாங்கிய அனிதா, நீட் தேர்வில் 80 வாங்கியிருக்கிறாள் என்றால் மாநில கல்வித் தரம் அப்படி.அவளால் 1179 எப்படி வாங்கமுடிந்தது? எப்படி 80 தான் வாங்க முடிந்தது?

இதயதெய்வம் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் "நான்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்" என்று சொல்லியே வாக்கு வாங்கி யிருக்கிறார். அப்படியானால் ஏன் கிராமப்புறத்தின் கல்வித்தரத்தை உயர்த்த வில்லை?

எந்த ம..ருக்கு தமிழகம் நிரந்தர விலக்கு கேட்கிறது? இன்னும் எத்தனை யுகத்துக்கு கிராமத்தானை கிராமத்தானாகவே வைத்திருக்க நினைக்கிறது? அவனது வாழ்க்கைத்தரம் உயர்த்த ஏன் இவர்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் தவறி விட்டார்கள்?

இவர்களை இப்படியே விட்டால், பூனைக்கு யார் தான் மணி கட்டுவது? ஆக, இந்த இடத்தில் தான் தமிழகத்தின் கல்வித்தரத்தின் சாயம் வெளுக்கப்பட்டு விட்டது.. மோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், அவர்கள் செய்தது சரி தான். கிராமங்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறதா? விவாதிப்போம்..

கருடால்வான்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.