எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் திமுகவின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் உதயகுமார் படுகொலையை நினைத்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான. அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பதுதான் பல்கலைகழக மாணவர்களில் இருந்த மாணவர் காங்கிரஸ் அமைப்பின் கோஷம்.

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல்தான் அப்போதைய முதல்வர் கருணாநிதியை ஆத்திரமூ ட்டியது.அந்த பசங்க கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்கவிட்டு பல்கலைகழக வளாகத்தில்
கழுதையை நடமாட விட்டும் காம்பவுண்டு சுவற்றில் படம் வரைந்தும் கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்.

மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, காவல்துறையினரின் பாதுகாப்புடன் பட்ட மளிப்பு விழா காலையில் நடந்து முடிந்தது. கருணாநிதியும் புறப்பட்டு விட் டார். போகும் பொழுது காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங் கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு பிறகு சாயங்காலம் மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த போலீஸ் அறைகளில் தங்கியிருந்த மாணவர் களைத் ஊடுகட்டி அடித்தார்கள். பல பேருக்கு மண்டை உடைந்து இருந்தது.. மாணவர்களுக்கு போலீஸ் அடிக் கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும் ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் ஆஹா இது கருணா நிதியின் கைங்கரியம் தான் என்று புரிந்து கொண்டார்கள்.

அதை விட பெரிய கொடுமையை மறுநாள் பல்கலை கழக குளத்தில் மிதந்து கிடந்த சகமாணவன் உதய குமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள்; உறைந்து நின்றார்கள்.போலீஸ் தான் உதயகுமாரை அடித்து குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட ஆரம்பித்தார்கள்.

கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா பெருமாள் சாமியோ இது என் மகன் இல்லை என்று
கூறி விட்டார்.இப்படிக்கும் அவரும் ஒரு வாத்தியார். பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் போலீஸ் அவரை என்ன பாடு படுத்தி இருக்கும்.இதனால் வெகுண்டெழுந்த மாணவ ர்கள் வகுப்புகளை புறக்கணித்து கால வரை யற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்..

போலீசோ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது. இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலை யில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்மாலை வரை இருந்தது ஏன்? திடீரென போலீ ஸ்விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று விசாரணை கமிஷன் கேட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமி ழ்நாடு அரசு சார்பில் என்எஸ்.ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில்விசாரணைக் கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவி டப்பட்டது. கடைசியில் விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்து க் கும் போலீ ஸ்தாக்குதலு க்கும் தொடர்பில்லை என்று கூறி கருணா நிதிக்கு சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை.

இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்தி ரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது.அதில் கருணாநிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் எம்ஜியாருக்கு உதவி கேட்டு ஒரு லட்டர் அனுப்பியிருந்தார்.அந்த லெட்டர் அப்பொ ழுது பத்திரிக் கைகளிலும் வந்ததாம் ..

அந்த லெட்டரில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதியி ருந்தார் என்றால்…

ஐயா,

கொலையுண்ட உதயகுமாரின் (அண்ணாமலைப்பல்க லைக் கழகம்) தம்பி கே.பி.மனோகரன்எழுதிக் கொண் டது.

எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல் லச் செய்து பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத் தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.

இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் (கருணா நிதி)அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்த னர்.வீடு கொடுப்பதாக கூறினர்.வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமென என் தந்தையை பயமுறுத்தி சொல்ல செய்தனர்.

எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதாக க் கூறினர். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் நாங்கள் இதுவதை எந்தவிதஉதவி யும் பெறவில்லை. என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது:தேவைப்பட்டால்
ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங் கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனி யில் உத்தியோகமோ எனக்கு வாங்கித்தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத்திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக்ககின்றோம்.

தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று
உறுதியாக நம்புகிறேன்.

இப்படிக்கு.. கே.பி.மனோகரன்.

இப்படிதாங்க கருணாநிதியாலும் திமுகவாலும் அழிந்து போன தமிழர்கள் எத்தனை பேர் தெரியுமா…காலங்கள் கடந்தாலும் திமுகவினால் தமிழக மக்களு க்கு உண்டான காயங்கள் இன்னும் ஆறவில்லை இவர்களுக்கு காலம் தான் முடிவு கட்ட வேண்டும். காத்திருப்போம்.

நன்றி ; விஜயகுமார் அருணகிரி

Leave a Reply