ஆண்டுக்கு 3 ஆயிரம்கோடி காய்க்கும் "மருத்துவ கல்லூரி" மரத்தை நீட்தேர்வு வெட்டிசாய்த்தால் எப்படி சும்மா இருப்பார்கள் மாஃபியாக்கள்? உச்ச நீதிமன்றம் நீட்தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும், டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்பபடாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள் நிரப்ப படவில்லை.

– பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
– ACS மெடிக்கலில் 146.
– மீனாக்‌ஷி மெடிக்கலில் 130.
– செட்டிநாடு மெடிக்கலில் 127.
– SRM மெடிக்கலில் 98.
– ராமச்சந்திரா மெடிக்கலில் 76.
– சவீதா டெண்டல் 77.

எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு.

டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும். (குறைந்தது 120 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்று கேள்வி…)

>> ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 5,200க்கும் குறைந்தது ரூ 2,600 கோடி. இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கட்டணம். எல்லாம் போச்ச்ச்ச்ச்! இது தவிர, இதை நம்பி இருக்கும் நாமக்கல் பள்ளிகள் பெறும் வருமானம்.

>> இவ்வளவு பணத்தையும் மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்? இன்னும் எத்தனை ஏமார்ந்த மாணவர்களின் உயிரை பறிக்குமோ இந்த கும்பல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை துஷ்டர்களிடம் அணுகாமல் காத்து கொள்ளவும்.

>> இப்படி இருக்கைகள் நிறப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்…?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.