சமூக ஊடகங்களில் தவறானதகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோதசக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.


துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப்பிரிவை அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார். இந்தியா-நேபாளம் இடையிலான 1,751 கி.மீ. எல்லையையும், இந்தியா-பூடான் இடையிலான 699 கி.மீ. நீள எல்லையையும் காக்கும்பணியில் ஈடுபட்டுள்ள இப்படையின் வீரர்களை ராஜ்நாத்சிங் பாராட்டினார். அவர் மேலும் பேசியதாவது:


பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான நமது எல்லைப்பகுதி முள்வேலியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், இந்தியா-நேபாளம், இந்தியா-பூடான் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் திறந்தவெளி எல்லைகளாக உள்ளன. விசாஇல்லாமல் இருதரப்புமக்களும் சென்றுவர இந்த எல்லைகள் அனுமதிக்கின்றன. இத்தகைய திறந்தவெளி எல்லைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும்.


ஒரு திறந்தவெளி எல்லையில், எந்த வழியாக ஒருகுற்றவாளி வருவார் என்பதையோ, யாரெல்லாம் தேசவிரோதி என்பதையோ, கள்ள நோட்டுகள் அல்லது போலி போதை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டு வருவது யார் என்பதையோ பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாது.


வீரமரணமடையும் துணை ராணுவப் படை வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்துள்ளேன். அதேவேளையில் தற்போது பணியில்இருக்கும், நெருக்கடியான சூழலைச் சந்திக்கும் படைவீரர்களுக்கும் ஏதாவது செய்வது குறித்து பரிசீலித்து வருகிறேன். அவர்களுக்கு நிச்சயம் நல்லதுசெய்வேன்.


அடிப்படை இல்லாத, தவறான செய்திகளும், தகவல்களும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூகவலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்பலரும் அவை உண்மை என்று நம்பி விடுகின்றனர்.
இவ்வாறு சமூகத்தில் பதற்றைத் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிக்கின. எனவே, அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று எஸ்எஸ்பி படை வீரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது போன்ற தகவல்களை நம்பாமலும், பகிராமலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.