வாங்கு வங்கி அரசியலை விட, நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர்மோடி, இன்று விலங்குகள் மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கி கூடியிருந்த விவசாயிகள் மத்தியில் பேசினார்.

அப்போது, விலங்குகள் மருத்துவ முகாமை ஏற்பாடுசெய்த உத்தரப்பிரதேச அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மோடி வாழ்த்துதெரிவித்தார். 

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவுகண்டபடி புதிய இந்தியாவை உருவாக்க இந்த 5 வருடத்தை பயன்படுத்தி கொள்வோம். 

"பால் உற்பத்தியில் எங்கள் நாடு பெரியது, ஆனால் மற்ற பால்உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டின் பால் உற்பத்தி குறைவாக உள்ளது". விலங்குகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும்மாநில அரசின் செயல் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் நமது கால்நடைகளை நல்ல பாராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி செய்ய உதவுவோம். இறுதியில் நம்நாட்டின் வளர்ச்சியில் அது உதவும். இந்த மருத்துவ முகாம் மூலம் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயன் அளிக்கும், நமது விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று கூறினார். 

பால் மற்றும் கூட்டுறவு துறையில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். அரசின் மண்பரிசோதனை அடையாள அட்டை விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை தருவதாக அமையும்.

மேலும், எங்களை பொறுத்தவரை, வாக்குவங்கி அரசியலைப் பற்றியோ அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ ஆட்சி நடத்தவில்லை. நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை என்றவர், கட்சியைவிட நாடே பெரியது. வாக்கு வங்கியைப் பற்றி நான் நினைக்க வில்லை. நமது நாட்டை சுத்தமான, சுகாதாரமான இந்தியாவாக தூய்மையாக வைத்திருப்பது நமது அனைவரின் கூட்டுபொறுப்பு என்றும் யாரும் அழுக்கு மற்றும் ஒரு அசுத்த சூழலில் வாழக் கூடாது என்றும் கூறினார்.

வாரணாசியில் உள்ள ஷகன்ஷக்பூர் கிராமத்தில் தூய்மை இந்தியாதிட்டத்தின் ஒருபகுதியாக கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அப்போது நம்நாட்டை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமையாகும். தூய்மையான இந்தியா ஆரோக்கி யமான இந்தியாவிற்கு வழிவகுக்கும். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கழிவறைகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அடிக்கல் நாட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.