தாஜ்மஹாலைச் சுற்றி சிக்கல். தாஜ் மஹால் , சுற்றுலா தலமா இல்லையா? ஏன் காவிகள் இப்படி மத வெறி பிடித்து அலைகிறார்கள்?


நான் டெல்லியில் வேலை செய்திருந்தாலும், இது வரை தாஜ்மஹால் பார்த்ததில்லை. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாய் பார்ப்பேன். அந்த தாஜ்மஹால் பின்னால் இன்னொரு கதை இருந்தாலும்,யோகி அந்தக் கட்டடத்தை இடித்து அங்கே ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லவில்லையே!

சாயபுகள் , புத்தர் சிலைகளை வெடிகுண்டு வைத்து தகர்த்தார்கள்..அது போல் சிரியாவில் ஐ.எஸ். கோஷ்டியினர் புராதன கலைப்பாடு சிற்பங்களை சிதைத்தார்கள்.

இதையெல்லாம் தாண்டி, இதற்கும் முன்னால், பாபர், அக்பர் , அவுரங்கசீப் , கஜினி முகம்மது, கோரி முகம்மது போன்ற முகலாய மன்னர்கள் ஹிந்து கோயில்களை, சம்ஸ்கிருத நூல்களை, ஹிந்து கலாச்சாரத்தை சிதைத்த வரலாறு நாம் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

யோகி அப்படியெல்லாம் செய்யவில்லையே!

வெறும் தாஜ்மஹாலையே சொல்லிக் கொண்டிருக்காமல் மற்ற சுற்றுலாத் தலங்களையும் அடையாளம் காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, அவருடைய அமைச்சர் தாஜ்மஹாலுக்கு 175 கோடி செலவழிக்க பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்..உலகில் எந்த முஸ்லிம் நாட்டில், ஹிந்து கலாச்சாரத்தை , அடையாளத்தை வெளிப்படுத்தும் கோயில்களுக்கு வருடந்தோறும் பராமரிப்பு செலவு இந்த அளவுக்குச் செய்கிறார்கள்?

நான் கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு வந்தால் தாஜ் மஹால் போவேன். அப்படிப் போன கையோடு தாஜ்மஹால் பற்றி எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ளவும் கண்டிப்பாய் முயல்வேன்.

யோகி, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரம் கிடையாது என்று சொன்னது கொலைபாதக செயல் கிடையாது.

விவாதிக்கட்டுமே!

நன்றி கருடால்வான்

One response to “யோகி, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரம் கிடையாது என்று சொன்னது கொலைபாதக செயல் கிடையாது”

  1. Anonymous says:

    உண்மைதான்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.